பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 எம்.ஜி.ஆர். புரொடக்‌ஷென்ஸ் எம்.கே.யு. மலேசிய கலை உலகம் கூட்டு ஏற்பாட்டில் நடைபெறுகிறது

பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 எம்.ஜி.ஆர். புரொடக்‌ஷென்ஸ் எம்.கே.யு. மலேசிய கலை உலகம் கூட்டு ஏற்பாட்டில் நடைபெறுகிறது

mgr100_spprabha

பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டை முன்னிட்டு பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 எதிர்வருகின்ற ஆகஸ்டு மாதம் 12 ஆம் தேதி மாலை 06.00 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள தான் ஸ்ரீ K.R. சோமா அரங்கில் நடைபெற இருக்கிறது. மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கும் மக்கள் திலகத்தை நினைவுகூறும் வகையில் இந்த கலை இரவை எம்.ஜி.ஆர். புரொடக்‌ஷன்ஸ் சேர்ந்த எம்.ஜி.ஆர் கலைமகள் திருமதி பூங்கொடி எம்.கே.யு. மலேசிய கலை உலகம் குழுவினருடன் இணைந்து ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்த கலை நிகழ்ச்சியில் நடனம் மற்றும் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. எம்.ஜி.ஆர். சிறந்து விளங்கிய சிலம்பாட்டமும் சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருகிறது. இவற்றுடன் சேர்ந்து ஒரு புத்தக வெளியீடும் நடைபெற இருக்கிறது.

எம்.ஜி.ஆர். தங்கராஜு, எம்.ஜி.ஆர் மதி ஆகியோரின் அபிநயம் நடைபெறுகிறது.

ஏரா நடனக்குழுவினர் தங்கள் நடனத்தால் நம்மை மகிழ்விக்க இருக்கின்றனர்.

பார்வையிழந்த பாடகர்களான திரு. நாகா, குமாரி காயத்ரி ஆகியோருடன் பாடகர்கள் TMS சிவகுரு, சென்னை TMS ராஜா, N.பாலா, ரமேஷ், ஷர்மிளா சிவகுரு, நளினா ஆகியோரும் இணைந்து நம்மை இசை வெள்ளத்தில் ஆழ்த்த போகிறார்கள்.

நமது பாரம்பரிய கலையான சிலம்ப சாகச நிகழ்ச்சியை மகாகுரு ஆறுமுகம் அவர்களின் புதல்வர் மகாகுரு அ.சிவகுமார் அவர்களின் மாணவர்கள் மேடையில் நிகழ்த்த இருக்கின்றனர்.

நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக தமிழகத்தை சார்ந்த பேராசிரியர் மற்றும் சினிமா வரலாற்று ஆராய்ச்சியாளர் உயர்திரு வா. பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதியிருக்கும் ”எம் ஜி.ஆரின் வாத்தியார் காளி என். ரத்தினம்” என்ற புத்தக வெளியீடு நடைபெற இருக்கிறது.

நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக ஆஸ்திரேலியாவில் இருந்து திரு. வெங்கட் ராவ் மற்றும் அவரது துணைவியார், பேராசிரியர் உயர்திரு . வா. பாலகிருஷ்ணன் அவர்கள் , பல நாடுகளில் பெரும்புகழ் பெற்ற சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் மற்றும் சென்னை லயன்ஸ் கிளப் கவர்னர் டாக்டர். மணிலால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியின் பிரதான அறிவிப்பாளர் திரு. தமிழ் செல்வன்

கடந்த ஆண்டு MGR THE LEGEND 3, என்ற மாபெரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் கலைமகள் என்ற சிறப்புக்குரிய பட்டத்தினை திருமதி பூங்கொடி அவர்களுக்கு மதிப்புக்குரிய சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் வழங்கியது குறிப்பிடத்தக்கது. பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 நிகழ்வில் சிங்கப்பூர் எம்.ஜி.ஆர் சில கலைஞர்களுக்கு விருது வழங்க இருக்கிறார்

இந்த நிகழ்ச்சியில் MALAYSIAN ASSOCIATION FOR THE BLIND சங்கத்திற்கு நன்கொடையாக Rm 3,000 பார்வையற்றோர் முன்னேற்றத்திற்கு அந்த நிறுவனத்தின் உறுப்பினரிடம் மேடையினில் காசோலையாக வழங்கப்படும்.

பிரமாண்டமான அரங்க அமைப்பு ஒளி ஒலி ஏற்பாடு கண்கவர் கலை நிகழ்ச்சி என  எம் ஜி.ஆரின் 100 ம் ஆண்டு பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 , சிறப்பாக நடைபெறும் என்று அதன் ஏற்பாட்டாளர் எம்.ஜி.ஆர் கலைமகள் பூங்கொடி தெரிவித்தார். எம்.ஜி.ஆர் கலைமகள் திருமதி பூங்கொடியின் இரண்டாவது நிகழ்ச்சியான பொன்மனச் செம்மலின் பொன்விழா 2017 நிகழ்ச்சி எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு என்றும் நினைவில் நிற்கும் நிகழ்வாக அமையும்.