கவிப்பேரரசு வைரமுத்துவின் புத்தகத்திற்கு டான் ஸ்ரீ கே. ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம் நடத்திய போட்டியில் பரிசு

கவிப்பேரரசு வைரமுத்துவின் புத்தகத்திற்கு டான் ஸ்ரீ கே. ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம் நடத்திய போட்டியில் பரிசு

KRSomu5 KRSomu6

டான் ஸ்ரீ கே. ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம் சார்பாக நடைபெற்ற அனைத்துலக புத்தகப் பரிசுப்போட்டி 2014 இல் கவிப் பேரரசு திரு. வைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர் என்ற புத்தகம் முதல் பரிசை வென்றது. இந்தியா, இலங்கை, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியாவை சேர்ந்த பல எழுத்தாளர்களின் 198 புத்தகங்கள் இந்த போட்டிக்காக ஆய்வு செய்யப்பட்டன. இந்த போட்டியில் வென்றவர்களுக்கான பரிசளிப்பு விழா 05/09/2014 அன்று மாலை 5.00 மணியளவில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள கூட்டுறவு சங்கத் தோட்ட மாளிகையில் நடைபெற்றது.

KRSomu9KRSomu8

இந்த விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து,  கவிஞர் கோ. புண்ணியவான், இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வென்ற திரு. வைரமுத்து அவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகை இந்த விழாவில் வழங்கப்பட்டது.

மலேசிய நூல்களுக்கான பிரிவில் கவிஞர் கோ. புண்ணியவானின் செலாஞ்சர் அம்பாட் நூல் பரிசு பெற்றது. அதற்கு 10,000 மலேசிய ரிங்கிட் பரிசு வழங்கப்பட்டது.

டான் ஸ்ரீ கே. ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம் 2010 இல் துவங்கி இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை புத்தகப் போட்டிகள் நடத்தி எழுத்தாளர்களை ஊக்குவித்து வருகிறது.

KRSomu3KRSomu2 KRSomu4 KRSomu7