யொங் பெங் தமிழ்ப்பள்ளி சிக்கலைத் தீர்க்க நடவடிக்கை

யொங் பெங் தமிழ்ப்பள்ளி சிக்கலைத் தீர்க்க நடவடிக்கை

s1

நவம்பர் 19, ஜொகூர் மாநிலத்தின் யொங் பெங் தமிழ்ப்பள்ளியின் கட்டட நிர்மாணிப்பு தொடர்பான சிக்கலைத் தீர்ப்பதற்குக் கல்வி அமைச்சம் பிரதமர் துறையின் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுத் திட்ட வரைவுத் பிரிவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்று அதன் தலைவர் பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ் இராஜேந்திரன் தெரிவித்தார்.

யொங் பெங் தமிழ்ப்பள்ளியின் கட்டட குழுவினர் எதிர்நோக்கிய பணப்பற்றாக்குறையை பிரதமர் துறையின் கவனத்திற்கு கொண்டு வந்தபோது அதனை பரிசீலித்து, பள்ளிக்கு வருகை அளித்து நிலைமையை கண்டறிந்த பின்னர் அக்கோரிக்கையை பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். இதுவரையில் நிறைவு செய்யப்பட்டிருக்கும் பணிகளுக்கும் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டுயுள்ள பணிகளுக்குமாக 13 லட்சம் ரிங்கிட்டை பிரதமர் அங்கீகரித்து, கல்வி அமைச்சம் இதனை அமல்படுத்தியது.