விவேகானந்தா ஆசிரமம் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்

விவேகானந்தா ஆசிரமம் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும்

vik

நவம்பர் 28, பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரம்ம நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று தீர்க்கமான முடிவு ம.இ.கா மத்திய செயலவைக்கூட்டத்தில் நேற்று எடுக்கப்பட்டது. இந்த நூற்றாண்டு கால கட்டடம் ஒரு பாரம்பரிய அம்சமாக நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை கட்சி வலியுறுத்துவதாக அதன் தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல் நேற்று தெரிவித்தார்.

ம.இ.கா மத்திய செயலவைக்கூட்டம் நேற்று பகல் ஒரு மணிக்கு தொடங்கி ஒரு மணி நேரத்தில் முடிவுற்றது. விவேகானந்தா ஆசிரமம் மற்றும் கட்சியின் பேராளர் மாநாடு குறித்து மட்டுமே இதில் விவாதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

விவேகானந்தா ஆசிரமம் இடித்துத்தள்ளப்படக்கூடாது. அதை ஒரு தேசிய பாரம்பரியக் கட்டடமாக நிலைநிறுத்த வேண்டும். அங்கு ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் எதுவும் நிர்மாணிக்கப்படக்கூடாது. ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்பட வேண்டும். அதே சமயம் ஆசிரம நிர்வாகஸ்தர்கள் அந்த நிலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் மேம்பாடுப்பணிகளையும் நிறுத்த வேண்டும்.