உள்துறை அமைச்சம் மீது வழக்கு

உள்துறை அமைச்சம் மீது வழக்கு

malaysia-court (1)

நவம்பர் 7, பினாங்கு மாநிலத்தின் 9,000 தொண்டர்படையை சட்ட விரோதமானது என உள்துறை அமைச்சம் அறிவித்ததை எதிர்த்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பினாங்கு மாநில அரசாங்கம் அறிவித்தது.

மேற்கண்ட தகவலை அறிவித்த பினாங்கு முதல்வர் லிம் குவான் எங், இது சம்பந்தப்பட்ட சட்ட ஆலோசனையை அது செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தொண்டர்படைக்கு எதிராக அரசியல் நோக்கத்துடன் உள்துறை அமைச்சர் எடுத்த நடவடிக்கை என அவர் தெரிவித்தார்.

சட்டவிரோதமான முறையில் தொண்டர்படை சங்கத்தினர்களை கைது செய்ய அமைச்சம் அங்கீகாரம் அளித்தது எனவும் அவர் தெரிவித்தார். எந்தவித கருத்து பரிமாற்றமும் மேற்கொள்ளாமல் தொண்டர் படையை சட்டவிரோதமானது என அறிவித்தது இது நீதிக்கு எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டார்.