திரெங்கானு: சனிக்கிழமை வரையில் சூறாவளி அபாயம் இருக்கும் என தகவல்

திரெங்கானு: சனிக்கிழமை வரையில் சூறாவளி அபாயம் இருக்கும் என தகவல்

Rain01

நவம்பர் 13, கடற்கரை பகுதிகளில் சனிக்கிழமை வரையில் சூறாவளி அபாயம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடல் அலைகளின் அழுத்தம் 3.5 மீட்டர் உயரத்திற்கு இருப்பதால் இந்நிலை மேலும் மோசமாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்நிலை தொடர்ந்தால் கிழக்கு கடற்கரை காற்று ஒரு மணி நேரத்திற்கு 40-லிருந்து 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என திரெங்கானு மாநிலத்தின் தேசிய பாதுகாப்பு மையத்தின் செயலாளர் ரொஸ்லினா தெரிவித்தார்.
தற்போது திரெங்கானு மாநிலத்தின் தட்பவெப்பநிலை சீராக இருப்பதாகவும் வெள்ளம் வரும் அறிகுறி ஏதும் தெரியவில்லை எனவும் நீர்வளத்துறை அறிவித்துள்ளது. நிலைமை சரியாக இருந்தாலும், திரெங்கானு மாநில மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.