slide
Prev
Next
ம.இ.கா புத்ராவின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி விளையாட்டு போட்டிகள்.*     ம.இ.கா இளைஞர் பிரிவும் மணிபால் சர்வதேச பலகலைக்கழகமும் இணைந்து உதவித்தொகை திட்டம்.*    தமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.*     நடிகர் ஜோ இன்று காலை மருத்துவமனையில் காலமானார்.*

சற்றுமுன்

குழந்தை பிரிஷா சந்திரனின் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில் நடக்க இருக்கிறது. இந்த அறுவை சிகிச்சைக்கு சுமார் 3,00,000 ரிங்கிட் வரை செலவு பிடிக்கும் என கூறப்பட்ட நிலையில் பிரிஷாவின் மருத்துவ செலவிற்கு உதவி செய்ய பல அமைப்புகளும் தனி நபர்களும் முன்வந்திருக்கின்றனர். பாஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் RMS சாரா இயக்கத்தில் பென் ஜி போன்றோர் நடிப்பில் உருவாகியிருக்கும் மாமா மச்சான் மலேசிய தமிழ் திரைப்படம் எதிர்வருகின்ற ஆகஸ்டு மாதம் 3ஆம் தேதி மலேசியா எங்கும் உள்ள 18 திரையரங்குகளில் திரையிடப் படுகிறது. குழந்தை பிரிஷாவின் மருத்துவ செலவிற்கு உதவும் வகையில் மாமா மச்சான் குழுவினர் நேற்று 31/07/2017 ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை […]

பகடிவதைக்கு ஆளாகிய நவீனின் கொடூரமான மரணத்தை கண்டித்து அஞ்சலி செலுத்தும் விதமாகவும் பகடிவதை கொடுமைக்கு எதிராகவும் மலேசியாவில் உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட  பைக்கர்ஸ் கிளப்புகளும் இன்று ஒன்றிணைந்து ஒரு பெரிய பேரணி நடத்தின. இதில் கலந்து கொண்ட அனைவரும் பகடிவதை கொடுமைக்கு எதிராக பேசினர். நவீனின் இறப்பே இத்தகைய மரணத்தில் கடைசியாக இருக்க வேண்டுன் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.    

ம.இ.கா ஏற்பாட்டில் மலேசிய மனித உரிமை ஆணையத்துடன் (SUHAKAM) ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சி 04/07/2017 காலை 10.30 மணிக்கு ம.இ.கா தலையகத்தில் உள்ள நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடல் மனித உரிமைகள் பற்றி நடந்தது. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் தன்ஸ்ரீ ரஜாளி பின் இஸ்மாயில் மனித உரிமைகளை காப்பதில் ம.இ.கா வின் முயற்சிகளை பாராட்டினார். அவர் மேலும் கூறுகையில் மனித உரிமைகள் என்பது ஏதோ ஒரு நாட்டின் தனிப்பட்ட பிரச்சனை இல்லை என்றும் இன்றைய சூழலில் மனித உரிமைகளை பொறுத்தவரையில் நாம் அனைவரும் உலகின் குடிமக்கள் என்றார். இந்த கலந்துரையாடலில் ம.இ.கா தேசிய தலைவரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் […]

ம.இ.கா புத்ரா பிரிவு ஏற்பாட்டில் 03/07/2017 அன்று பெட்டாலிங் ஜெயா சிட்டி பல்கலைக்கழகத்தில் சுமார் 21 கல்லூரிகளில் இருந்து சுமார் 400 மாணவர்கள் கலந்து கொண்ட “Inspire 2 Aspire” கலந்துரையாடல் நிழக்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ம.இ.கா தேசிய தலைவரும் மத்திய சுகாரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், ம.இ.கா துணைத் தலைவர் திரு. SK தேவமணி, மத்திய கல்வித்துறை துணை அமைச்சர் டத்தோ P.கமலநாதன், ம.இ.கா தேசிய தகவல் பிரிவு தலைவர் டத்தோ V.S. மோகன், ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன், ம.இ.கா தேசிய புத்ரா பிரிவு தலைவர் திரு. யுவராஜா மணியம் மற்றும் மத்திய செயற்குழு […]

இன்று பிரதமர் அவர்களால் மலேசிய இந்திய சமுதாயத்திற்கான வியூகச் செயல் வரைவுத்திட்டம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது மனதுக்கு நெகிழ்ச்சியை அளிக்கிறது என மத்திய சுகாரத்துறை அமைச்சரும் ம.இ.கா தேசிய தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்  . இவ்வரைவுத் தி ட்டம், அரசாங்கத்தில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு அங்கீகரிக்கப்பட்டு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அவ்வகையில், இன்று தொடங்கி அதிகாரபூர்வமாக அமலாக்கத்திற்கும் வருகின்றது. நாட்டின் 11வது மலேசியத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கும் பொழுது, இந்தியச் சமுதாயத்திற்கான வியூகச் செயல் வரைவுத் திட்டம் உருவாக்கப்பட வேண்டுமென்ற முடிவு பிரதமர் அவர்களால் எடுக்கப்பட்டது. அவ்வகையில், இந்தியச் சமுதாயத்தின் முன்னேற்றத்தை மனத்தில் வைத்துக் கொண்டு அரசாங்கம் வியூக வரைவுத் திட்டத்தை […]

பொது சேவைகள் துறை (PSD) உதவித்தொகை விதிகள் மாற்றத்திற்கு கண்டனம் தெரிவித்தும் அதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றும் ம.இ.கா இளைஞர் பிரிவு தலைவர் திரு. சிவராஜ் சந்திரன் நேற்று 19/03/2017 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அவசரமாக மாற்றம் செய்யப்பட்டுள்ள பொது சேவைகள் துறை(PSD) உதவித்தொகை பெறுவதற்கான விதிகள் பற்றி மத்திய மந்திரிசபையையும் கல்வித் துறையையும் உடனடியாக கவனத்தில் கொள்ள வேண்டும் என ம.இ.கா இளைஞர் பிரிவு வலியுறுத்துகிறது. தங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து பாடங்களிலும் A+ மதிப்பெண் பெற்றுள்ள எஸ்.பி.எம் மாணவர்களுக்கு மட்டுமே முழு உதவித்தொகை வழங்குவது என பொது சேவைகள் துறை(PSD) யின் அவசர முடிவை மத்திய அமைச்சரவையும் தலைமை செயலாளரும் தலையிட்டு […]

ஜான்சன் & ஜான்சன், சன்வே குழுமம், ஏர் ஏசியா மற்றும் AIA ஆகிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் நாட்டில் முதன் முதலாக  தொழிலாளிகளிடம்  புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த ஒரு திட்டத்தை கடந்த 09/03/2017 அன்று துவங்கின. இந்த முயற்சியை சுகாரத்துறை அமைச்சச்ரும் ம.இ.கா தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் அவர்கள் துவங்கிவைத்து திட்டத்தை பற்றியும் புகை பிடித்தலை குறைக்க அரசின் நடவடிக்கை பற்றியும் பேசினார். இத்தகைய முயற்சி நமது நாட்டில் இதுவே முதல் முறை.  பெரு வணிக நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து நாட்டின் நலனை முன்னிறுத்தி ஒரு சுகாதார செயதிட்டத்தை ஊக்க்குவிக்க ஒன்றாக இணைந்திருப்பது ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகும். புகை பிடித்தல் நமது […]

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அருள்பாலித்து வந்த பூச்சோங் பிரிமா ஸ்ரீ மகா சக்தி தேவி ஆலயத்திற்கு மாற்று நிலம் வேண்டி மித்ரஜெயா மேம்பாட்டு நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப்போராட்டத்தில் மஇகாவின் உதவித்தலைவர் டத்தோ டி.மோகன் ,மஇகா தேசிய இளைஞர் பகுதி துணைத்தலைவர் தினாளன்,செயலாளர் அர்விந்த்கிருஷ்ணன், இளைஞர் படையினர்,சுற்றுவட்டார சமுதாயப்பெருமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்தப்போராட்டத்தின் எதிரொலியாக தற்காலிக ஆலயமும் நிலை நிறுதப்பட்டுள்ளது.