எம்.ஜி.ஆர் அனைத்துலக மாநாடு – புகைப்படக் கண்காட்சியுடன் கொண்டாட்டம் ஆரம்பம்

எம்.ஜி.ஆர் அனைத்துலக மாநாடு - புகைப்படக் கண்காட்சியுடன் கொண்டாட்டம் ஆரம்பம்

photoexhibition_31-1
எம்.ஜி.ஆர் அனைத்துலக மாநாடு மற்றும் நூற்றாண்டு விழா 2017 எதிர்வருகின்ற செப்டம்பர் 09 மற்றும் 10 ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டிலும் அதனைத் தொடர்து நடைபெற இருக்கும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளிலும் உலகின் பல நாடுகளில் இருந்து தலைவர்கள், பிரமுகர்கள், எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் மற்ரும் விசுவாசிகள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. உள்ளூரில் இருந்தும் மத்திய சுகாஅதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் போன்று பலர் திரளாக கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மாநாட்டில் ஒரு அங்கமாக எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சி ஒன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரி. நாடகம், சினிமா. அரசியல் நினைவுகளை எடுத்துறைக்கும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த புகைப்படக் கண்காட்சி இன்று 04/09/2017 மாலை 4.30 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள தன்ஸ்ரீ KR சோமா அரங்கில் துவங்கியது.

இக்கண்காட்சியை மகளிர் மாமணி டத்தின்ஸ்ரீ உத்தாமா டாக்டர் இந்திராணி சாமிவேலு, மலேசியாவுக்கான இந்திய தூதர் திரு.  T.S. திருமூர்த்தி, தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ சகாதேவன், தமிழகத்தை சேர்ந்த சுவாமி பாபுஜி, மலாயா பல்கலைக்கழக துணைபதிவதிகாரி புண்ணியமூர்த்தி ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தனர்.

இன்று துவங்கிய இந்த கண்காட்சி 05, 06, 07 செப்டம்பர் மாலை 06 மணி முதல் 09 மணி வரை தன்ஸ்ரீ KR சோமா அரங்கில் நடைபெறுகிறது.  பொது மக்களும் என்.ஜி.ஆர் ரசிகர்களும் இந்த அரிய புகைப்படைங்களை கண்டு எம்.ஜி.ஆர் பற்றி மேலும் அறிந்து கொள்ள விழா ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அதன் ஏற்பாட்டு குழு தலைவர் எஸ்.பி.மணிவாசகம் கூறுகையில்,  கண்காட்சியுடன்  இந்த மாநாட்டின் அங்கமாக எம்.ஜி.ஆர். அவர்களின்  சிறப்பு அஞ்சல் தலை வெளியீடு, கலைநிகழ்ச்சி, பட்டிமன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள்  ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த நிகழ்ச்சிகளை கண்டு களிக்க அனுமதி இலவசம்.
photoexhibition_2-1 photoexhibition_4-1 photoexhibition_7-1 photoexhibition_8-1 photoexhibition_11-1 photoexhibition_13-1 photoexhibition_14-1 photoexhibition_15-1 photoexhibition_16-1 photoexhibition_21-1 photoexhibition_22-1 photoexhibition_23-1 photoexhibition_24-1 photoexhibition_26-1 photoexhibition_29-1 photoexhibition_32-1 photoexhibition_33-1 photoexhibition_34-1 photoexhibition_35-1 photoexhibition_37-1 photoexhibition_38-1 photoexhibition_39-1