வந்தேறிகள் என்றும் குடியேறிகள் என்று யாரையும் அழைக்க அனுமாதிக்காதீர்கள்

வந்தேறிகள் என்றும் குடியேறிகள் என்று யாரையும் அழைக்க அனுமாதிக்காதீர்கள்

mic-logo

அக்டோபர் 5, வரலாற்று நிபுணர் பேராசிரியர் முனைவர் தான் ஸ்ரீ கூ கே கிம் அவர்கள், பாரங்களில் இனம் எனும் இடத்தில் மலேசியர் என்று குறிப்பிடுங்கள் என்று கூயிருப்பதை ம.இ.கா இளைஞர் பிரிவு வரவேற்கிறது.

இனம் அல்லது தேசிய மொழியில் bangsa எனும் சொல் எந்த நாட்டின் பிரஜை என்பதை வினவுகிறதே தவிர இனத்தின் தோற்றத்தை அல்ல.

இந்தியர் சீனர் அல்லது மேலாயு என்று குறிப்பிடுவதற்கு பதிலாக ஒருவர் மலேசியாவின் பிரஜை என்றால் மலேசியர் என்றே குறிப்பிடலாம். காரணம் நாம் அனைவரும் மலேசியர்கள்.

இந்தியா என்பது பல மதம், கலாச்சாரம் கலந்த மக்களை கொண்டிருந்தாலும் அந்த நாட்டு பிரஜை யாரைக் கேட்டாலும் இந்தியர் என்றுத்தான் குறிப்பிடுவார்கள். காரணம் இந்தியாத்தான் அவர்களது தேசம்.

அதேப்போல்தான் நாமும் மலேசியர்கள் என்று குறிப்பிர வேண்டும். நமது மூதாதையர்களுக்குத்தான் சீனாவும் இந்தியாவும் பூர்வீகமாக இருந்ததே தவுற நமக்கு அல்ல. ஆக நாம் இந்தியர் என்றும் சீனர் என்றும் பாரங்களை நிரப்புவது எப்படி நியாயமாகும்? அப்பழக்கத்தை உடனே நாம் துடைத்தொழிக்க வேண்டும்.

குடியேறிகள் என்றும் வந்தேறிகள் என்றும் (pendatang & immigrant) எனும் சொல்லைக்கூட நாட்டின் பிரஜை அல்லாதவருக்கே உபயோகிக்க வேண்டும் என்று ஸ்ரீ கூ கே கிம் அவர்கள் வலியுருத்துகிறார். ஆக இந்த நாட்டிலே பிறந்து வளர்ந்தவர்களை வந்தேறிகள் என்றோ குடியேறிகள் என்றோ எந்தத் தரப்பினரும் அழைக்கக் கூடாது.