நல்லொழுக்கம் இல்லாத ஆசிரியர்கள் எப்படி மாணவர்களுக்கு நன்னெறி போதிப்பர் – மஇகா இளைஞர் பிரிவு கேள்வி

நல்லொழுக்கம் இல்லாத ஆசிரியர்கள் எப்படி மாணவர்களுக்கு நன்னெறி போதிப்பர் – மஇகா இளைஞர் பிரிவு கேள்வி

Student2 Student3

கடந்த வாரம் போர்டிக்சன் தேசியப் பள்ளியில் சர்மினி த/பெ முத்து என்ற மாணவியைக் காலணியால் அடித்து மூன்று தையல்கள் போடும் அளவுக்கு காயம் விளைவித்த திரு அப்துல் ரஹிம் ஜாபர் நன்னெறி பாட ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி  மஇகா  இளைஞர் பிரிவு பத்திரிக்கையாளர் சந்திப்பை  16/07/2014 அன்று நடத்தியது.

மஇகாவின் இளைஞர் பிரிவு மாணவியின்பெற்றோர்இந்தவழக்கை  நடத்துவதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளையும் மற்ற உதவிகளையும் வழங்கும் என மஇகா இளைஞர் பிரிவின் தலைவர்  திரு. C. சிவராஜ் அவர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். தவறிழைத்த ஆசிரியரை இடமாற்றம் செய்தல் இத்தகைய குற்றங்களுக்கு தண்டனையாகாது. தற்சமயம் இது போன்ற காட்டுமிராண்டிதனங்கள் அதிகமாக அரங்கேறுகிறது. இத்தகைய கண்டிக்கத்தக்க குற்றச் செயல்களுக்கு இன மத பேதமின்றி தகுந்த கடுமையான தண்டனை உடனே வழங்குவதன் மூலமே இத்தகைய செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தியர்கள் என இல்லாமல் மற்ற எந்த இனத்து மாணவருக்கு இத்தகைய சம்பவம் நடந்திருந்தாலும் மஇகா அவர்களுக்கு நியாயம் வேண்டி போராடி இருக்கும் எனவும் திரு. சிவராஜ் தெரிவித்தார்.

மஇகா இளைஞர் பிரிவின் துணை தலைவர் திரு. தினாளன் அவர்களே மாணவியின் பெற்றோர்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்க உள்ளார்.

8 வயதே ஆன தனது மகளை இரத்தம் வடிய பார்த்த அவளது தந்தை மிகவும் மன வேதனை அடைந்ததாக பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார். கண்களுக்கு அருகில் அடி பட்டிருந்ததால் அவளது கண் பார்வைக்கு எதிர்காலத்தில் ஏதாவது குறை வருமோ என அச்சப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இரத்தம் வடிந்து கொண்டிருந்த தனது மகளை பற்றி அந்த குறிப்பிட்ட ஆசிரியர் எந்த விதத்திலும் கவலை கொள்ளவில்லை என தன் கோவத்தை அவர் தெரிவித்தார். நல்லொழுக்கம் இல்லாத இத்தகைய ஆசிரியர்கள் எவ்வாறு நன்னெறி வகுப்புகளில் நல்ல பண்புகளை மாணவர்களுக்கு போதிப்பார் எனவும் வினவினார்.

Student1 Student4