பள்ளிகளில் புறப்பாட நேரத்தின் போது இணைய பாதுகாப்பு திட்டம்

பள்ளிகளில் புறப்பாட நேரத்தின் போது இணைய பாதுகாப்பு திட்டம்

17cb_singapore_16ju_660146e

நவம்பர் 4, பள்ளிகளில் புறப்பாட நேரத்தின் போது இணைய பாதுகாப்பு மீதான பாடத் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவிருப்பதாக தகவல், தொடர்பு, மற்றும் பல்லூடக ஆணையம் தெரிவித்துள்ளது.
இத்திட்டம் குறித்த விண்ணம் கல்வியமைச்சகத்துடன் இன்னமும் பேச்சு வார்த்தையில் இருப்பதாக ஆணையத்தின் தலைவர் டத்தோ முகமது ஷாரில் தார்மிசி தெரிவித்தார்.
நம் நாட்டில் 18.6 மில்லியன் பேர் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களில் 37 விழுக்காட்டினர் 24 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள்.
இணையப் பாதுகாப்பு பற்றிய பாடத்திட்டத்தின் ஒரு பகுதி ஏற்கெனவே தேசியச் சேவை திட்டத்தில் கற்பிக்கப்படுகிறது. இது பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்படுவது நன்மையளிக்கும் என டத்தோ முகமது ஷாரில் தார்மிசி தெரிவித்தார்.
நமது பிள்ளைகள் இணையத்தைப் பயன்படுத்தும் போது தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டும் என யுனிசெப்ஃ-பின் ஆய்வுக்கட்டுரை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டப்பின் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.