பேராக்கில் புகைமூட்டம் பள்ளிகள் மூடப்படுகின்றன

பேராக்கில் புகைமூட்டம் பள்ளிகள் மூடப்படுகின்றன

Malaysia

சித்தியவான், ஜூலை 22- பேராக், சித்தியவான் மாவட்டத்தில் கடுமையான புகைமூட்டம் நிலவுவதால் அங்குள்ள பல பள்ளிகள் மூடப்படுகின்றன.

இன்று மதியம் 1.10 நிலவரப்படி, சித்தியவான் பகுதிகளின் காற்றுத் தூய்மைக்கேட்டின் அளவு 239-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலையில் IPU எனும் காற்றுத் தூய்மைக்கேடு 250-ஆகப் பதிவாகியுள்ளது.

மோசமான காற்றுத் தூய்மைக்கேடு காரணமாக 5959 மாணவர்கள் 427 ஆசிரியர்களை உள்ளடக்கியப் பள்ளிகள் மூடப்படுகின்றன. விடுமுறை வழங்கப்படும் எல்லாப் பள்ளிகளும், பள்ளி நாட்களில் ஈடுசெய்யப்படும். சம்பந்தப்பட்ட இடங்களின் காற்றுத் தூய்மையில் முன்னேற்றம் ஏற்படும் வரையில் பள்ளிகள் மூடப்படும்.

மொத்தம் 6 ஆரம்பப்பள்ளிகளும் 9 இடைநிலைப் பள்ளிகளும் மூடப்படுகின்றன.