பெங்கலான் குபோர் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிப்பு

பெங்கலான் குபோர் இடைத்தேர்தல் தேதிகள் அறிவிப்பு

Noor-Zahidi-Omar

பெங்கலான் குபோர் தொகுதியின் தேசிய முன்னணி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ நூர் சாஹிடி ஒமார் ஆகஸ்டு 20-ஆம் தேதி மரணமடைந்ததால் காலியான பதவிக்கான இடைத்தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இடைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வருகிற செப்டம்பர் 13 ஆம் தேதியும் இடைத்தேர்தல் வாக்களிப்பு செப்டம்பர் 25 ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.