MH370 விமானம் இந்திய பெருங்கடலில் கண்டுபிடிக்கப்படும்: லியோ தியாங் லாயும்

MH370 விமானம் இந்திய பெருங்கடலில் கண்டுபிடிக்கப்படும்: லியோ தியாங் லாயும்

mh17

மார்ச் 7, MH370 விமானம் காணாமல் போய் நாளையுடன் 1 வருடம் நிறைவடைவதைத் தொடர்ந்து. 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான MH 370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. MH370 கண்டுபிடிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மலேசியா போக்குவரத்து துறை மந்திரி லியோ தியாங் லாயும், இந்திய பெருங்கடலில் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கண்டுபிடிக்கப்படும் என முழுநம்பிக்கை உள்ளது என்று தெரிவித்து உள்ளார். மலேசிய அதிகாரிகள் விமானம் தொடர்பாக எந்தஒரு தகவலையும் அழிக்கவில்லை, மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார். வருகிற ஞாயிறு அன்று மலேசிய விமான போக்குவரத்து துறை இடைக்கால அறிக்கையை வெளியிடுகிறது. ஆஸ்திரேலியா தலைமையில் தொடர்ந்து இந்திய பெருங்கடலில் மாயமான விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது.