நஜிப் துன் ரசாக் தலைமையிலான அமைச்சரவை மாற்றம்

நஜிப் துன் ரசாக் தலைமையிலான அமைச்சரவை மாற்றம்

ஜூலை 28, பிரதமர் நஜிப் துன் ரசாக் தலைமையிலான அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு வாணிக மற்றும் கூட்டுறவு அமைச்சராக டத்தோ ஹாம்சா சாய்னுடின்னும் இயற்கை மற்றும் சுற்றுச் சுழல் அமைச்சராக டத்தோ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாவார் நியமிக்கப்பட்டுள்ளார். அறிவியல் தொழில்நுட்ப துறை அமைச்சராக டத்தோ வில்ஃபெரட் மெடியல் தங்காவ் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் துறை அமைச்சராக டத்தோ ஶ்ரீ மாஹ்ட்சிர் காலிட்டும் டத்தோ ஶ்ரீ அசாலினா ஒத்மான் சாயிட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சராக டத்தோ ஶ்ரீ ஒங் கா சுவான் நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண்மை துறை அமைச்சராக டத்தோ ஶ்ரீ அஹ்மாட் சப்ரி சேக் நியமிக்கப்பட்டுள்ளார்.