நடப்பு பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும்:சிவசுப்பிரமணியம்

நடப்பு பிரச்சினைக்குத் தீர்வு காண புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும்:சிவசுப்பிரமணியம்

logo

ஜனவரி 27, ம.இ.கா தொடர்ந்து வலுவான ஒர் அரசியல் கட்சியாகவும் நடப்பு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமானால் கட்சியில் எல்லா நிலைகளிலும் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று ம.இ.கா தேசிய தகவல் பிரிவு தலைவர் எல்.சிவசுப்பிரமணியம் கேட்டுக்கொண்டார்.

சங்கங்களின் பதிவு இலாகாவின் ஆலோசனைக்கு ஏற்ப மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் நெருக்குதல் கொடுத்து வருகின்றனர். அவ்வாறு மறுதேர்தல் நடத்தினால் ம.இ.காவின் தேர்தல் விவகாரம் தீர்க்கப்பட்டு விடுமா? என்ற கேள்வியை தாம் முன்வைப்பதாக நேற்று வெளியிட்ட ஒர் அறிக்கையில் கூறினார்.

ம.இ.கா தேர்தலில் முறைகேடுகள் நிகழ்ந்துள்ளதாக தேர்தலில் தோல்வி கண்டவர்கள் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து கடந்த 5.12.2014ஆம் தேதி சங்கங்களின் பதிவு இலாகா வெளியிட்ட கடிதத்தில் 2கிளைகள், 8 தொகுதிகள் உட்பட கட்சியின் 23 மத்திய செயலவை உறுப்பினர்கள் மற்றும் 3 உதவி தலைவர்கள் பதவிகளுக்கு மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டது.

பின்னர் 31.12.2014 ஆம் தேதி கொடுக்கப்பட்ட மற்றொரு கடிதத்தில் மேலும் 4 தொகுதிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படியும் உத்தரவிட்டது.

தேசிய முன்னணியின் தோழமை கட்சி என்ற அடிப்படையில் ம.இ.கா வலுவான ஒரு கட்சியாக உருவெடுக்க ம.இ.கா தேசிய தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல் மேற்கொள்ளும் கட்சியின் உருமாற்றத் திட்டத்திற்கு கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் பக்கப்பலமாக இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு தொண்டரின் எதிர்பார்ப்பாகும் என்று சிவசுப்பிரமணியம் தமது அறிக்கையில் கூறினார்.