MH370 விமான பயணிகளின் வங்கிப் பணம் மாயம் வங்கி ஊழியர் கைது

MH370 விமான பயணிகளின் வங்கிப் பணம் மாயம் வங்கி ஊழியர் கைது

216515522

ஜனவரி 13, மாயமான MH370 விமான பயணிகளின் வங்கிப் பணத்தை கையாண்டதன் வழி வங்கி ஊழியர் மற்றும் அவரது கணவரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவ்விமானத்தில் பயணம் செய்த 4 பயணிகளின் வங்கிப் பணமான தலா RM85,180-யை அவர்களுக்குத் தெரியாமல் வெளியாக்கியதால் நூர் ஷிலா கானான் மற்றும் அவரது கணவர் பாஷீர் அஹ்மட் மௌளா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஹஸ்பி வங்கி ஊழியரான ஷீலா MH370 விமானத்தில் பயணம் செய்த மலேசிய பயணியான ஹு புய் ஹெங் என்பவரின் 40,000-தை சீன நாட்டவரான தியான் ஜூன் வெய் என்பவரின் வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளார். மேலும் ஒரு பயணியின் பணமான தளா ரிம35,000- தை அலி ஃபாரான் கான் என்பவரின் வங்கிக் கணக்கிற்கும் மாற்றியுள்ளார்.
பிறரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுத்ததற்காகவும், போலி பத்திரங்கள் பயன்படுத்தியதற்கும் இவர் மீது குற்றங்கள் பதிவாகியுள்ளன.
ஷீலா தான் வேலைச் செய்த லெபோ அம்பாங் ஹெஸ்பிசி வங்கியில் இக்குற்றத்தைச் செய்துள்ளார். இவருக்கு உடந்தையாக இவரது கணவர் இருந்துள்ளார். எனவே, நீதிமன்றத்தின் உத்தரவின்படி இவர்கள் இருவரையும் போலீஸ் தேடிவருகின்றனர்.