வளம் சேர்க்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்

Tamil-News-Malaysia

Tamil-News-Malaysia

டிசம்பர் 24, கிறிஸ்துமஸ் பெருநாளை இவ்வருடம் கொண்டாடும் அனைத்து மலேசிய இந்திய கிறுஸ்த்துவர்களுக்கும் ம.இ.கா இளைஞர் பிரிவினர் சார்பில் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். கிறிஸ்த்துமஸ் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது குதுகலம். புனிதம், பரிசுப்பொருட்கள் தான். வருடத்தின் இறுதியில் இப்பண்டிக்கை வருவதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக கொண்டாடும் ஒரு பண்டிகை இதுவென்ன கூறலாம்.

வருடம் முழுவதும் எத்தனை துயரங்களை நாம் சந்திதாலும், எத்தனை வேதனைகளை எதிர் நோக்கி இருந்தாலும் வருடம் முடியும் தருவாயில் வரும் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை ஒரு புத்துணர்ச்சிஐயும் ஒரு புது ஊக்கத்தையும் தந்து புது வருடத்தை சந்திக்கவல்ல ஒர புது நம்பிக்கையும் தருகிறது.

ஆக இப்பண்டிகை காலம் அனைவரது வீட்டிலும் மகிழ்ச்சியையும் மனநிம்மதியையும் நிரப்பி நல்ல வாழ்க்கையும் மேன்னையான குணங்களையும் அமைய என்றும் இறைவன் ஆசிர்வதிக்க வேண்டிக்கொள்கிறேன். அனைவருக்கும் மேரி கிறிஸ்த்துமஸ்.