கோம்பாக் முதல் தாமான் மெலாத்தி ரயில் நிலையம் வரை தண்டவாளத்தில் கோளாறு

கோம்பாக் முதல் தாமான் மெலாத்தி ரயில் நிலையம் வரை தண்டவாளத்தில் கோளாறு

railway-attack

டிசம்பர் 1, திங்கட்கிழமை காலையில் கோம்பாக் – கிளானா ஜெயா பாதையில் செல்லும் இலகு ரயில் சேவை நிலைகுத்தி நின்றது. இதனால் வேலைக்கு செல்லும் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர்.
கோம்பாக் முதல் தாமான் மெலாத்தி ரயில் நிலையம் வரை தண்டவாளத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இந்த இலகு ரயில் சேவை குறைந்தது 4 மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் 8 மணி முதல் 10 மணி வரை வேலைக்கு செல்ல வேண்டிய பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர்.
இதைத்தொடர்ந்து, இலகு ரயிலை அதிகமாக பயன்படுத்தும் தாமான் மெலாத்தி மற்றும் வாங்சா மாஜு நிலையத்தில் பொது மக்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. நேரம் தாமதமாக, தாமான் மெலாத்தி நிலையத்தில் சாலை வரை மக்கள் எறும்பு சரத்தைப் போல் வரிசையாக நின்றிருந்தனர். இந்நிலையில், சிலர் பேருந்து மற்றும் வாடகைக்கார் தேடி அங்கும் இங்கும் அலைந்தனர்.
மேலும், அதிகமான கூட்டத்தினால் அனைத்து ரயில் நிலையங்களிலும் குளிர்சாதன வசதிகள் பெரும்பாலும் குறைவாகவே இருந்தன. இதனால் மக்கள் வெப்பம் தாள முடியாமல் தவித்தனர். சுமார் நான்கு மணி நேரமாக நீடித்த இந்த பிரச்சனை, மெல்ல சரி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.