வங்கி கணக்கு வைத்திருப்பவர்களிடம், சேமிப்பு இருக்கிறது என்று அர்த்தம் இல்லை

வங்கி கணக்கு வைத்திருப்பவர்களிடம், சேமிப்பு இருக்கிறது என்று அர்த்தம் இல்லை

Dr.-Zeti

நவம்பர் 30, மலேசியாவில் 53 விழுக்காட்டினரிடம் எந்த ஒரு சேமிப்பும் இல்லை என மலேசிய மனித அபிவிருத்தி அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. நாட்டில் பல வங்கிக் கணக்குகள் ஒருவர் வைத்திருந்தாலும் இதற்கு அவர் வங்கியில் சேமிப்பு வைத்திருப்பதாக அர்த்தம் இல்லை. அவர்கள் வங்கிக் கணக்குகள் வைத்திருந்தாலும் அதில் சேமிப்பு வைத்திருக்கிறார்களா என்பது தான் கேள்வுக் குறியாக உள்ளதாகத் அவ்வறிக்கைத் தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கு பதிலடிக் கொடுத்த மலேசிய வங்கி கவுனர் தான் ஶ்ரீ டாக்டர் சேத்தி அக்தார் ஹசிஸ் மலேசிய மக்கள் தொகையில் 90 விழுக்காட்டு மக்கள் வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
நம் நாட்டு மக்களில், ஒருவரிடம் ஒன்றுக்கும் மேல்பட்ட வங்கி சேமிப்புகள் உள்ளன. இதுவே மலேசிய மக்களிடம் சேமிப்பு அதிகமாகவே உள்ளதை நிரூபிக்கின்றது என்றார் அவர். சேமிப்பே இல்லாவிடில் எதற்கு அவர்கள் பல வங்கிகளில் அதிகமான கணக்குகள் வைத்திருக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பினார்.
மலேசியர்களிடம் வங்கியில் மட்டும் அல்லது இதர தனிப்பட்ட சேமிப்புத் திட்டங்களிலும் கணக்கு வைத்திருப்பதாகவும் அவர் கூறினார். மலாய்க்காரர்கள் தாபோங் ஹஜியிலும் பிற மதத்தினர் அமனா சஹாமிலும் சேமிப்பு வைத்திருப்பதாக சேத்தி கூறியுள்ளார்.
இந்த அறிக்கையின் படி, வங்கிக் கணக்கு வைத்திருந்தாலும், சேமிப்பு இருக்கிறதா என்பது தான் தற்போது கேள்வியாக உள்ளது