அனைத்து அஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு ‘Astro GO’ சேவை இலவசம்

அனைத்து அஸ்ட்ரோ வாடிக்கையாளர்களுக்கு ‘Astro GO’ சேவை இலவசம்

31mar_from-left-ridhuan-sidek-gan-ling-sze-rosanne-lo-liew-swee-lin-charmaine-kwan-tina-tong-and-alexa

கோலாலம்பூர்,30 மார்ச் 2017 – அஸ்ட்ரோ கோ வாடிக்கையாளர்கள் அதாவது முன்பு அஸ்ட்ரோ ஒன் தெ கோ என அழைக்கப்படும் செயலியின் சேவையை இலவசமாக அணுக முடியும் என்று இன்று அஸ்ட்ரோ அறிவித்தது. இந்த அஸ்ட்ரோ கோ  செயலி புதிய பயனர் இடைமுகம்(interface) கொண்டு புதுப்பிக்கப்பட்டு பயனிட்டாளர்கள் எளிதாகத் தங்களுடைய விருப்பமான நிகழ்ச்சிகளையும் ஆன் டிமாண்ட் உள்ளடக்கங்களைக் கண்டறிய முடியும்.

பதிவு செய்து இணைக்கப்பட்ட தங்களுடைய அஸ்ட்ரோ கோசெயலி கணக்கு வாயிலாக அனைத்து அஸ்ட்ரோ வாடிக்கையாளர் ஏப்ரல் 1-ஆம் தொடக்கம் மே 31-ஆம் தேதி வரை அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் ஆன் டிமாண்ட் உள்ளடக்கங்களை அஸ்ட்ரோ கோ-வில் இலவசமாக அனுபவிக்கலாம். அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் அல்லாதவர்கள் இந்தப் புதிய அஸ்ட்ரோ கோசெயலியைப் பதிவிற்றம் செய்து இந்தக் குறிப்பிட்ட நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அலைவரிசைகளை அணுகலாம். இதைத் தவிர்த்து,பதிவு செய்து இணைக்கப்பட்ட அஸ்ட்ரோ கோசெயலி கணக்கு கொண்டவர்கள் ரயான் கோஸ்லிங் மற்றும் எம்மா ஸ்டோன் நடிப்பில் வெளிவந்த லா லா லேண்ட் திரைப்படத்தை ஏப்ரல் 25-ஆம் தேதி தொடக்கம் மே 31-ஆம் தேதி வரை ஆன் டிமாண்ட் வாயிலாக இலவசமாகக் கண்டு களிக்கலாம்.

அஸ்ட்ரோவின் வர்த்தக தலைமை அதிகாரி, லியூ சியூ லின் கூறுகையில், “‘அஸ்ட்ரோ கோ’ செயலியை 3 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பதிவிற்றம் செய்து இந்தச் சேவையை வரவேற்கின்றார்கள். அஸ்ட்ரோவின் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்வதில் அவர்கள் எங்கே இருந்தாலும் அஸ்ட்ரோ கோசெயலியில் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கலாம். அவாப்போது அஸ்ட்ரோ கோ உள்ளடக்கங்களின் வாயிலாக வாடிக்கையாளர்களிடம் சென்றடைவதில் கவனத்தில் கொள்வோம். தற்போது, எங்களின் வாடிக்கையாளர்கள் அஸ்ட்ரோ கோ-வில் 71 அலைவரிசைகள் மற்றும் அமெரிக்கா, கொரியா, ஐரோப்பா, சீனா,ஹாங் காங் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து 23,000ஆன் டிமாண்ட் உள்ளடக்கங்கள் கண்டு களித்து மகிழலாம்”.

இதுவரை அஸ்ட்ரோ கோசெயலியை 3.2 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ள வேளையில் 1.1 மில்லியன் பேர் மட்டுமே பதிவு செய்துள்ளார்கள். வாராந்திர நாட்களில் 60 நிமிடத்தைத் தாண்டி 215 நிமிடங்கள் என இதன் மூலம் இரசிகர்கள் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கின்றார்கள்.

 ‘அஸ்ட்ரோ கோ’ செயலியின் புதிய அம்சங்களை மேம்படுத்தப்பட்ட காரணங்கள்:-

  • நகர்தன்மை மேம்படுத்தல். தாங்கள் விரும்புகின்ற நிகழ்ச்சிகளை எந்த இடத்திலும் இருந்து பார்க்கலாம்.
  • எளிதில் எங்கு வேண்டுமானலும் எடுத்து செல்லக்கூடிய கையடக்கம். ஆன் டிமாண்ட் மூலம் உயர் தரமான திரைப்படங்களைப் பதிவிறக்கம் செய்து எந்தவொரு அலைவரிசையின்றி தேவையான நேரத்தில் எப்பொழுது வேண்டுமின்றாலும் கண்டு களிக்கலாம்.
  • கருத்து பரிமாற்றங்கள் அதிகரித்தல். தங்களுடைய பார்க்கும் அனுபவம் மற்றும் உள்ளடக்கங்களைக் குறித்த கருத்துகளைத் தங்களைச் சுற்றி இருப்பவர்களுடன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
  • தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் தரமான பயனுள்ள நிகழ்ச்சிகளைப் பகிர்ந்து ஊக்குவிக்கின்றது.

‘அஸ்ட்ரோ கோ’ செயலியின் முக்கிய அம்சங்கள்

  • புதிய பயனர் இடைமுகம். பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்துவதுடன் அண்மையில் வெளிவந்த உள்ளடக்கங்களைக் காணலாம்.
  • துல்லிய ஒளிபரப்பில் அனைத்து விளையாட்டு மற்றும் கொரியா அலைவரிசைகள்
  • பரிந்துரைக்கப்பட்ட பிரத்தியோக அம்சம். தரமான மற்றும் ‘அஸ்ட்ரோ கோ’ பயனிட்டாளர்களின் விருப்பமான நிகழ்ச்சிகளைத் தருகின்றது.
  • Home-Tab Bar(Home, Sports, Channels, On-Demand, Settings) -தங்களுடைய விருப்பமான அலைவரிசைகளையும் நிகழ்ச்சிகளையும் எளிதாகக் கண்டு பிடிக்கலாம்.
  • ‘Download2Go’ அம்சம் – தங்களுடைய விருப்பமான திரைப்படங்களை பதிவிறக்கம் செய்யலாம். பிறகு, இணையம் இணைப்பின்றி அத்திரைப்படங்களைக் கண்டு களிக்கலாம்.
  • நகர்தன்மை மேம்படுத்தல். தாங்கள் விரும்புகின்ற நிகழ்ச்சிகளை எந்த இடத்திலும் இருந்து பார்க்கலாம்.

எதிர்வரும் காலங்களில் ‘அஸ்ட்ரோ கோ’ செயலி ஒரு அஸ்ட்ரோ கணக்கில் 4 பயனிட்டாளர்கள் அணுகுதல்,  தங்களுடைய விருப்பான நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சியின்றி பார்க்கும் அம்சம், Sports Control அம்சத்தில் விளையாட்டு இரசிகர்கள் செய்திகள், லீக் போட்டியின் அட்டவணைகள், விளையாட்டாளர்களின் தரவரிசைப் பட்டியலில் என புத்தம் புதிய அம்சங்கள் இணைக்கப்படும்.

அனைத்து மலேசியார்களும் அஸ்ட்ரோவின் வாயிலாக 16 விளையாட்டு அலைவரிசைகளுடன் புதிய Sports Controlஅம்சத்துடன் தங்களுடைய விருப்பமான விளையாட்டு நிகழ்ச்சிகளைத் தவறாமல் கண்டு களிக்கலாம்.

அஸ்ட்ரோ கோவாடிக்கையாளர்களுக்குப் பிரத்தியேகமான புதிய அலைவரிசைகள்

தற்போதுள்ள அலைவரிசைகளைத் தவிர்த்து, ‘அஸ்ட்ரோ கோ’ Comedy Central, K-PLUS for those மற்றும் ANIPLUSஎன மூன்று புதிய அலைவரிசைகளை வழங்குகின்றது.

அதுமட்டுமின்றி, Celestial திரைப்படங்கள், Nickelodeon, DIVA, AXN,மற்றும் KIX ஆன் டிமாண்ட் உள்ளடக்கங்களையும் வழங்குகின்றது.

ஐஓஎஸ் (iOS) மற்றும் அண்டிரோய்டு (Android) சாதனங்களின் மூலம் புதிய ‘அஸ்ட்ரோ கோ’ செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது மேம்படுத்தப்பட்ட இந்தச் செயலியின் சேவையை அனுபவிக்க www.astrogo.comஅகப்பக்கத்தை வலம் வருங்கள்.

31mar_liew-swee-lin-chief-commercial-officer-of-astro31mar_from-the-left-ridhuan-sidek-and-liew-swee-lin 31mar_ridhuan-sidek-vice-president-of-digital-products31mar_astro-go-logo_rgb_artboard-2   31mar_astro-go-logo_rgb-01