அம்னோ மாநட்டை துவங்கி வைத்தர்: பிரதமர் ஸ்ரீ நஜிப்

அம்னோ மாநட்டை துவங்கி வைத்தர்: பிரதமர் ஸ்ரீ நஜிப்

020502-D-2987S-027

நவம்பர் 27, தலைநகரில் உள்ள புத்ரா உலக வர்த்தக மையத்தில் நடந்துக்கொண்டிருக்கும் 2014-ஆம் ஆண்டின் அம்னோ வருடாந்திர மாநாடு மாண்புமிகு பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் துன் ரசாக்கால் அதிகாரப்பூர்வமாக வியாழக்கிழமை துவங்கி வைக்கப்பட்டது. மூன்று நாட்களாக நடக்கும் இம்மாநாடு எதிர்வரும் சனிக்கிழமை வரை தொடரும்.
நாடு தழுவிய அளவில் 2, 763 பேர் கூடியிருக்கும் இந்த மாநாட்டில் முக்கிய உரை ஆற்றிய அம்னோ தலைவரான, பிரதமர் நஜிப் பின்னர் அதிகாரப்பூர்வமாக இம்மாநாட்டை திறந்து வைத்தார்.
காலை 8.00 மணியளவில் மலேசியா மற்றும் அம்னோ கொடியை ஏற்றும் அங்கத்தோடு தொடங்கிய இந்த மாநாடு பின் தேசிய பண் மற்றும் அம்னோவின் எழுச்சி பாடலோடு தொடர்ந்தது.
இந்நிலையில், 68-வது வருடமாக நடைபெறும் இந்த அம்னோ மாநாட்டில் தேசிய நிந்தனை சட்டம் 1948, தாய்மொழிப்பள்ளிகள், இஸ்லாமிய மதத்தொடர்பான கருத்துகள், பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் மற்றும் தேசிய ஒற்றுமை உள்ளிட்ட பல விஷயங்கள் கலந்துரையாடப்படுகிறது.
இதனிடையே, இவ்வருட அம்னோ மாநாட்டின் சுலோகனாக “மலாயு பெர்சாத்து” தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது