விவசாயிகளுக்கு RM1.5 லட்சத்தை உதவித்தொகையாகக் கொடுத்துள்ளது NAFAS

விவசாயிகளுக்கு RM1.5 லட்சத்தை உதவித்தொகையாகக் கொடுத்துள்ளது NAFAS

Logo12

ஜனவரி 27, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவும் வகையில் அவர்கள் மீண்டும் விவசாயத்தில் ஈடுபட NAFAS எனப்படும் தேசிய விவசாயிகள் அமைப்பு RM1.5 லட்சத்தை உதவித்தொகையாகக் கொடுத்துள்ளது.
வெள்ளத்தால் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு துறையில் ஈடுப்பட்டிருந்தவர்களின் இடங்கள் அழிந்திருக்கும் இந்நிலையில் அவர்கள் மீண்டும் விவசாயத்தைத் தொடர இந்த உதவித்தொகை வழங்கப்பட்டிருப்பதாக NAFAS அமைப்பின் தலைவரான டத்தோ ஸ்ரீ சைபுல்பாரி சுயுப் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த உதவித்தொகை கிளாந்தான், திரங்கானு, பகாங், ஜோகூர், பேராக், கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் இருக்கும் விவசாயத்துறையைச் சார்ந்த மக்களுக்கு பகிர்ந்து தரப்படும் என சைபுல்பாரி சுயுப் கூறினார்.
இதனிடையே, விவசாயிகளின் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு பள்ளி செலவீனங்களுக்காக RM6000 வழங்கப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.