பி.கே.ஆர் கட்சியின் தலைவர்கள் மாற்றம்

பி.கே.ஆர் கட்சியின் தலைவர்கள் மாற்றம்

images

அக்டோபர், 13 பிகேஆர் கட்சியின் உதவித் தலைவராக இருந்த ராபிஸி ரம்லி அக்கட்சியின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பி.கே.ஆர் கட்சியின் துணைத் தலைவராக இருந்த அஸ்மின் அலி சிலாங்கூர் மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சி நிர்வாகம் இம்முடிவை எடுத்துள்ளது.

இதனிடையே பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் நூருல் இஸ்ஸா மற்றும் சைஃபுடின் ஆகியோர், கட்சியின் தேர்தல் இயக்குனர்களாகவும், பாயான் பாரு நாடாளுமன்ற உறுப்பினர் சிம் ட்ஸே ட்ஸின் ரஃபிசியின் கட்சி வியூக இயக்குனர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதை கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் தலைமையிலான கட்சிக்கூட்டத்தில் முடிவு அறிவிக்கப்பட்டது.