slide
Prev
Next
ம.இ.கா புத்ராவின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி விளையாட்டு போட்டிகள்.*     ம.இ.கா இளைஞர் பிரிவும் மணிபால் சர்வதேச பலகலைக்கழகமும் இணைந்து உதவித்தொகை திட்டம்.*    தமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.*     நடிகர் ஜோ இன்று காலை மருத்துவமனையில் காலமானார்.*

சற்றுமுன்

மலேசியத் தமிழர்களிடையே குறும்படங்கள் மீதான ஆர்வம் நம்ப முடியாத அளவுக்கு அதிக‌ரித்திருப்பது ஆரோக்கியமான மாறுதல் என்றே கூறலாம். தமிழில் தயாராகும் குறும்படங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் விருதுகள் பெற்று வருவது பெருமைக்குறியது ஒன்றாகும். திரைப்படத் தயாரிப்பில் ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஆஸ்ட்ரோ வானவில் பல குறும்படப் போட்டிகளை நடத்திவருகிறது. வெற்றிகரமாக நடந்து முடிந்த மகளிர் மட்டும் குறும்படம் போட்டியைத் தொடர்ந்து இம்முறை குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வண்ணம் “எங்கள் குடும்பம் இனிய குடும்பம்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி ஒரு குறும்படப் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. போட்டி விபரங்கள் : போட்டி தவணை 03 அக்டோபர் 2017 தொடங்கி 02 நவம்பர் 2017 வரை போட்டி […]

டத்தோ N.K.சுந்தரம் வழங்கும் ஹரிதாஸ் மிரட்டும் SD புவனேந்திரனின் “ஆசான்” திரைப்படம் எதிர்வருகின்ற நவம்பர் மாதம் 30ஆம் தேதி மலேசிய திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. SD புவனேந்திரனின் முந்தைய படைப்பான  மறவன் போலவே இந்த ஆசான் திரைப்படமும் மலேசியாவில் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்களிடமும் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கணிதப் பேராசிரியர் ஒருவர் தன் மகளை காப்பாற்ற நடத்தும்  போராட்டமே ஆசான் திரைப்படத்தின் ஒன் லைனர் என திரைப்படக் குழுவினர் சமீபத்தில் அறிவித்திருந்தனர். ஆசான் குழுவிற்கு நல்வாழ்த்துக்கள். இந்த அறிவிப்பை இரண்டு நாட்களுக்கு முன்னரே என் தமிழ் தனது முகப் புத்தக பக்கத்தில் அறிவித்தது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகின்றோம். ஹரிதாஸ். சஷிதரன், சீலன் மனோகரன், சரேஷ் […]

மலேசியா முழுதும் இன்று எல்லோரும் பேசும் ஒரே விஷயம் என் வீட்டுத் தோட்டத்தில் மலேசிய தமிழ்த் திரைப்படம் பற்றித்தான் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் மலேசிய தமிழ் இணையவாசிகள் அனைவரும் கண்டிப்பாக இந்த திரைப்படத்தை பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள் என்பது பேஸ்புக்கையும் வாட்சப்பையும் இன்ஸ்டாக்ராமையும்  உலா வருகையில் புரிகிறது. நாட்டில் உள்ள அனைத்து திரையுலக பிரபலங்களும் புதிதாக திரைத்துறைக்கு வந்தவர்களும் வரும் ஆர்வம் உள்ளவர்களும் என அனைவரும் என் வீட்டுத் தோட்டத்தில் திரைப்படத்தை மிகவும் சிலாகித்து பாராட்டுகிறார்கள். ஒவ்வொருவருக்கும் படத்தில் ஒவ்வொன்று பிடித்திருக்கிறது. சிலருக்கு பல விஷயங்கள் பிடித்திருக்கிறது. ஆனால் எல்லோரும் சொல்லும் விஷயம் பயம் என்பதுதான். அனைவரையும் படம் முழுதும் அடுத்தது என்ன நடக்கும் என […]

மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் வழங்கும் இசைஞானி இளையராஜாவின் ராஜா த ஒன் மேன் என்ற இசை நிகழ்ச்சி எதிர்வருகின்ற அக்டோபர் 07 ஆம் தேதி கோலாலம்பூரில் உள்ள ஆக்சியாடா அரங்கில் நடைபெற இருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியை முன்னிட்டு பிரபல தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் திரு மனோ அவர்கள் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று 23/09/2017 காலை ஹோட்டலில் நடைபெற்றது. பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மை ஈவண்ட்ஸ் இண்டர்நேஷனல் குழுமத்தின் தலைவர் திரு ஷாகுல் ஹமீத் பேசுகையில் ராஜா த ஒன் மேன் இசை நிகழ்ச்சி சுமார் 5 மணி நேரம் நடக்கும் என்று தெரிவித்தார். மேலும் நேயர் விருப்பமாக சுமார் 5 பாடல்கள் பாடப்படும் என்றும் […]

எம்.ஜி.ஆர் அனைத்துலக மாநாடு மற்றும் நூற்றாண்டு விழா 2017 எதிர்வருகின்ற செப்டம்பர் 09 மற்றும் 10 ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டிலும் அதனைத் தொடர்து நடைபெற இருக்கும் கண்கவர் கலை நிகழ்ச்சிகளிலும் உலகின் பல நாடுகளில் இருந்து தலைவர்கள், பிரமுகர்கள், எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் மற்ரும் விசுவாசிகள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. உள்ளூரில் இருந்தும் மத்திய சுகாஅதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் போன்று பலர் திரளாக கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மாநாட்டில் ஒரு அங்கமாக எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சி ஒன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரி. நாடகம், சினிமா. அரசியல் நினைவுகளை எடுத்துறைக்கும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. […]

எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோய்க்கு காரணமான எச்.ஐ.வி வைரசால் உலகில் அனைத்து பகுதியிலும் பல்லாயிரக்கணக்கானோர் இறந்து போயிருக்கின்றனர். இந்த வைரசின் தாக்கத்தை குறைக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இந்த நோய் வராமல் இருக்க தற்காப்பு வழிமுறைகளே இப்போது இருக்கும் ஒரே வழி. இந்த வைரஸ் பற்றியும் இதனால் ஏற்படும் மரணம் மற்றும் பாதிப்புகள் இது பரவும் விதம் பற்றியெல்லாம் பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பலரும் உலகம் முழுதும் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். இதன் அடிப்படையில் மலேசிய தமிழ் கலை துறையில் உள்ள சில பிரபலங்கள் ஒன்றாக இணைந்து தமிழ் கலை உலகில் முதன் முறையாக எச்.ஐ.வி வைரஸ் […]

கோலாலம்பூர், ஆகஸ்ட் 30-குறும்படத் தயாரிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்ட பெண்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவும் அதை வேளையில் வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருக்கும் புதிய இளம் பெண் இயக்குனர்களுக்குச் சிறந்த ஒரு தளத்தை ஏற்படுத்தி கொடுக்க ஆஸ்ட்ரோ வானவில் “மகளிர் மட்டும்” என்ற குறும்படப் போட்டி கடந்த மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நேற்று 29/08/2017 அன்று மாலை 03.00 மணிக்கு நியூ செண்ட்ரலில் நடைபெற்றது. இப்போட்டியில் சுஜித்திரா தேவி அருணகிரி தேவா இயக்கத்தில்  ‘பயணி’ குறும்படம் முதல் இடத்தை வென்று ரிம 10,000 தட்டிச் சென்றது. அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளின் மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறுகையில், “மகளிர்களுக்காக முதல் […]

உலகம் முழுதும் மோஜோ வகை பாட்டு நிகழ்ச்சிகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த வகையில் மலேசியாவில் மிகப் பிரமாண்டமான மோஜோ நிகழ்ச்சி மேடையில் லைவ் நிகழ்ச்சியாக நடத்தப்பட இருக்கிறது. எதிர்வருகின்ற செப்டம்பர் 09 ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் KWC பேஷன் மாலில் ஸ்டார் எக்ஸ்போ செண்டரில் MILFF – மலேசியன் இண்டிபெண்டண்ட் பியூஷன் பெஸ்டிவல் நடக்க இருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்கள் பிரபல பாடல்களை அவர்களின் தனி பாணியில் பாடுவார்கள். ஒவ்வொரு பாடகரும் அவருக்கான தனி தனி இசைக் குழுவினருடன் இணைந்து பாடுவார்கள். இந்த மோஜோ வகை இசைக் கச்சேரியில் விஜய் பிரகாஷ் – ஏ.ஆர்.பி. பேண்ட் […]