சீன, தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசாங்கம் ஒருபோதும் தடையாக இருக்காது

சீன, தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு அரசாங்கம் ஒருபோதும் தடையாக இருக்காது

sivaraj1

இந்நாட்டில் தாய்மொழியில் அடிப்படைக் கல்வியை வழங்கும் சீனம் தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சியில் எந்தப் பாதகம் ஏற்படாது என்று ம.இ.கா இளைஞர் பகுதி உறுதியாக நம்புவதாக அதன் தேசியத் தலைவர் சிவராஜ் சந்திரன் தெரிவித்தார். அண்மை காலமாக பலர் இது தொடர்பில் விவாதித்து வந்தபோதும், தாய்மொழி கல்விக்கு எந்த இடையூறும் வராது என்றார் அவர்.

பொறுப்பற்ற ஒரு சிலரே, சீனம் தமிழ் மொழி பள்ளிகளுக்கு எதிராக வேண்டாத கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். நடந்து முடிந்த ம.இ.கா பேராளர் மாநாட்டில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. சீனம், தமிழ்ப் பள்ளிகள் நாட்டின் ஒற்றுமை வளர்ச்சிக்கு என்றும் தடையாக இருக்காது என ம.இ.கா இளைஞர் பகுதி வலியுறுத்தி கூறியிருந்ததை திரு.சிவராஜ் நினைவுப்படுத்தினார்.

ஒவ்வோர் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் சீன, தமிழ்ப் பள்ளிகளுக்கு கணிசமான நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் செய்து வருகிறது. 2015ஆம் ஆண்டு வர செலவுத் திட்டத்தில் கூட, பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப்துன் ரசாக் தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்காக 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கீட்டை அறிவித்திருந்தார். இவை அனைத்தும் தாய்மொழி பள்ளிகளான சீனம் தமிழ்ப் பள்ளிகளின் மீது அரசாங்கம் அக்கறை கொண்டிருப்பதை காட்டுவதாக திரு, சிவராஜ் தெரிவித்தார்.

மலேசியாவின் 28 மில்லியன் மக்கள் தொகையில் ஒரு வெளிப்படுத்தும் அடிப்படையற்ற கருத்துகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்காது என்று தாம் திண்ணமாக கூறிவதாக திரு.சிவராஜ் குறிப்பிட்டார். இந்நாட்டில் சீனம், தமிழ்மொழி பள்ளிகள் மூடப்படாது என அவர் உறுதியாக கூறினார்.

ஒருவேளை தாய்மொழி கல்விக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் அரசு தரப்பில் திட்டங்கள் தீட்டப்பட்டால், அதனை எதிர்க்கும் முதல் அணி ம.இ.கா இளைஞர் பிரிவாக இருக்கும் என்றும் தீர்க்கமாக கூறினார்.