சம்பள பிரச்சனைகள் தீர்க்கப்படும் இன்னும் பெர்னாமா தமிழ்ச்செய்திகள் ஒளிப்பரப்பாமல் இருப்பதற்கு என்ன காரணம்

சம்பள பிரச்சனைகள் தீர்க்கப்படும் இன்னும் பெர்னாமா தமிழ்ச்செய்திகள் ஒளிப்பரப்பாமல் இருப்பதற்கு என்ன காரணம்

Sivaraj1 (1)

பிப்ரவரி 18, மலேசிய செய்தி நிறுவனம் (பெர்னாமா) கீழ் இயங்கும் பெர்னாமா தொலைக்காட்சியின் 160 ஊழியர்கள் சம்பள பிரச்சனையை எதிர்நோக்கி அதனால் பலர் வேலைக்கு சரியாக வரமுடியாமல் பல நிர்வாக பிரச்சனைகள் எழுந்தது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அப்பிரச்சனைகள் யாவும் தொடர்புத்துறை மற்றும் பல்லூடக அமைச்சரின் தலையீட்டுப் பிறகும், பெர்னாமா நிறுவனத்தின் நேரடி உதவிக்குப் பிறகும் 15 பிப்ரவரி அன்று தீர்க்கப்பட்டது. ஆனால் அப்பிரச்சனைகள் தீர்க்கப்ட்டு 2 நாட்கள் ஆகியும் ஏன் இன்னும் தமிழ் செய்திகள் ஒளிப்பரவில்லை என்று தெரியவில்லை. பெர்னாமா தமிழ்ச் செய்திகளுக்கென்று ஒரு தரம் இருக்கிறது. அதுமட்டுமின்றி இந்தியர்களிடையே நாட்டின் நடப்பை உடனுக்குடன் அறிவிப்பதில் பெர்னாமா சிறந்து விளங்குகிறது. ஆக அப்படிபட்ட ஒரு தகவல் சாதனம் உட்பிரச்சனைகள் தீர்க்கப்பட்டும் 3 நாட்களாக செய்தியை ஒளிபரப்பாமல் இருப்பது புரியாத புதிராக இருக்கிறது.

பெர்னாமா தொலைக்காட்சியின் சீன பிரிவுக்கும் இதே நிலை எற்பட்டிருக்கிறது என தெரியவருகிறது. ஆக செய்திகள் ஒளிப்பரபாகவில்லை என்பதனை மக்களுக்கு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.