இந்தியர்கள் கடத்தபட்ட சம்பவம் தொடர்பில் அலட்சியம் காட்டாதீர்

Online-Tamil-News-Malaysia

Online-Tamil-News-Malaysia

அக்டோபர் 20, இந்திய சமுதாயத்தை சார்ந்த 12 பேர் கடத்தப் பட்ட விவகாரம் தொடர்பில் போலீஸ் துறையினர் அலட்சியம் காட்டாது விசாரனையை துரிதப் படுத்தி உண்மையை நிலை நாட்ட வேண்டும். அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் போலிஸ் துறையினரின் தலையீடு இருந்தால் அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என டத்தோ டி.மோகன் கூறினார்.
குற்றவியல் அடிப்படையில் கைது செய்யப்பட்டு விசாரனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பலரின் நிலை என்ன வென்று தெரியவில்லை. என்ற குற்றசாட்டை எதிர் நோக்கி இருக்கும் போலிஸ் துறை அதனை களைவது குறித்தும், குற்றத்திற்கு காரணமானவர்களை கண்டு பிடிப்பது குறித்தும் முனைப்பு காட்ட வேண்டும். இந்த விவகாரத்தில் போலிஸ் துறையை சேர்ந்தவர்கள் சம்பந்தப் பட்டிருந்தால் அது கடுமையான கண்டனத்துகுரியது. இந்திய சமுதாயத்தினர் மத்தியில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை போலிஸ் உணர வேண்டும். அதோடு போலிஸ் படைத் தலைவர் டான் காலிட் அபு பக்கார் இது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றார் அவர். இந்தியர்கள் மீது தனிப்பட்ட முறையில் அரங்கேறி இருக்கும் இந்த விவகாரத்தில் நீதி பதியை நிலை நாட்ட இந்தியர்கள் அனைவரும் ஒருமித்த குரல் கொடுப்போம் என டத்தோ டி. மோகன் தமதறிக்கையில் வலியுறித்துள்ளார்.