ஜாலான் லிப்பிஸ்-மெராப்போ அருகே கார் விபத்து மூவர் பலி

ஜாலான் லிப்பிஸ்-மெராப்போ அருகே கார் விபத்து மூவர் பலி

micracleescape6

நவம்பர் 3, இன்று அதிகாலை ஜாலான் லிப்பிஸ்-மெராப்போ அருகே MPV ரக கார் ஒன்று விரைவு பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியாகினர்.
அதிகாலை 2.05 மணிக்கு 92-வது கிலோமீட்டரில் நிகழ்ந்த அவ்விபத்தில் நிக் சைனுடின் நிக் முகமது (வயது 58), அவரது மனைவி வான் அக்மா வான் அசிஸ் (வயது 54) அவர்களது 19 வயது மகள் நிக் லியானா ஆகியோர் பலியாகினர். இதே காரில் பயணித்த இத்தம்பதியின் மற்றொரு மகனான அஹ்மாட் பஹாரி (வயது 15) படுகாயமடைந்தார்.

இவர்கள் அனைவரும் ஜாலான் கோத்தாபாரு, கிளந்தானைச் சேர்ந்தவர்களாவர்.