ம.இ.கா விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்

ம.இ.கா விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்

logo

டிசம்பர் 17, ம.இ.கா வில் தற்போது நடந்து வரும் உட்பூசல் பிரச்சினையை பிரதமர் தலையிட்டு தீர்க்க வேண்டும் என அம்பாங்கை சேர்ந்த ஜேம்ஸ் காளிமுத்து கேட்டுக் கொண்டார். டத்தோ ஸ்ரீ பழனிவேலை சந்திக்க கோகன் மேற்கொண்ட முயற்சி தோல்வியுற்றதால் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள நாங்கள் தயாரக இருக்கின்றோம்.

2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ம.இ.கா தேர்தல் செல்லாது என சங்கங்களின் பதிவிலாகா ம.இ.காவிற்கு கடிதம் அனுப்பிவிட்டது. இந்தலையில் யாரை வைத்து கொண்டு டத்தோ ஸ்ரீ பழனிவேல் மத்திய செயலவையைக் கூட்டுகிறார் என அவர் கேள்ளி எழுப்பினார்.

இந்தியர்களின் தாய் கட்சியான ம.இ.கா பிரச்சினையில் பிரதமர் தலையிட்டு சமரசம் செய்து வைக்க வேண்டும். ம.இ.காவில் ஏற்பட்டுள்ள பிரச்சினை இந்தியர்களுக்கும் தேசிய முன்னணிக்கும் அவமானமாக உள்ளது.

தேசிய தலைவரின் நடவடிக்கையால் ம.இ.கா உறுப்பினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆர்ஒஎஸ் தேர்தல் நடத்த சொன்னால் நான் நடத்த தயார் என்று சொன்னார். இப்பொழுது மேல்முறையீடு செய்யப்போவதாக கூறிகிறார். ம.இ.கா தேர்தலில் குழப்பங்லளும் தில்லு முல்லும் ஏற்பட்டது நாடறிந்த உண்மை. இந்த உண்மையை உணர்ந்து கொண்டு டத்தோ ஸ்ரீ பழனிவேல் மறு தேர்தலை நியாமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என்று ஜேம்ஸ் கேட்டு கொண்டார்.