ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்: மலேசியாவிற்கு இடம்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்: மலேசியாவிற்கு இடம்

malaysianflag

அக்டோபர், 18 நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிற ஐ.நா. சபையில் 193 உறுப்பு நாடுகள் உள்ளன. 2 நாடுகள் பார்வையாளர்களாக உள்ளன.

இதில் பாதுகாப்பு கவுன்சில் 15 நாடுகளைக் கொண்ட அதிகாரமிகு அமைப்பு ஆகும். இதில், இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷியா, அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. மீதி 10 இடங்கள், நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.

5 நாடுகள் பதவிக்காலம் முடிகிறது. இதையடுத்து அந்த 5 இடங்களுக்கு புதிய உறுப்பு நாடுகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபையில் நடந்தது.

இதில் மலேசியா, அங்கோலா, வெனிசுலா ஆகிய 3 நாடுகளுக்கு போட்டியே இல்லை. இந்த நாடுகள் முறையே 190, 187, 181 ஓட்டுகள் பெற்று, நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளாக தேர்வு பெற்றன.

புதிய உறுப்பு நாடுகளான அங்கோலா, மலேசியா, நியூசிலாந்து, வெனிசூலா, ஸ்பெயின் ஆகியவற்றின் பதவிக்காலம் ஜனவரி 1-ந் தேதி தொடங்குகிறது.