14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் சிலாங்கூர்

14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் சிலாங்கூர்

june12_1

தேசிய ம.இ.கா தகவல் பகுதி மற்றும் சிலாங்கூர் ம.இ.கா தகவல் பிரிவு ஏற்பாட்டில் 14வது பொதுத் தேர்தலை முன்னிட்டு தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிலரங்கம் ஜூன் 11, 2017 காலை 8.00 முதல் மாலை 5.00 மணி வரை நேதாஜி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சியை ம.இ.கா தேசிய தகவல் பிரிவு தலைவர் டத்தோ VS மோகன் துவக்கி வைத்தார். பயிற்சி ஏற்பாடுகளை திரு. MB ராஜா, சிலாங்கூர் மாநில  ம.இ.கா தகவல் பிரிவு தலைவர் செய்திருந்தார். இந்த பயிரலங்கின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் திரு. சுபாஷ் சந்திரபோஸ் –  சிலாங்கூர் இளைஞர் தகவல் பிரிவு தலைவர்.    நிகழ்ச்சியில் பல்வேறு துறை வல்லுநர்கள் கலந்து கொண்டு பயிற்சிக்கு வந்திருந்தவர்களுக்கு பயனுள்ள பல விஷயங்களை விளக்கி பயிற்சி அளித்தார்கள்.

சத்ய சாய் நிறுவனத்தின் சமூக ஈடுபாட்டிற்கான சர்வதேச ஒருங்கிணைப்பாளர் மற்றும் சமயங்களுக்கிடையேயான சேவை நட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசியர் Dr. சுரேஷ் முழுமையான தலைமைத்துவம் என்ற தலைப்பில் உரையாற்றினார். பொருளாதாரம் / ஜி.எஸ்.டி. என்றால் என்ன? என்ற தலைப்பில் திரு. காலேஷ் – சிலாங்கூர் TOT குழு உறுப்பினர்  பல முக்கிய தகவலை தனது உரையில் பகிர்ந்தார். இந்திய சமுதாயத்திற்கான தற்போதைய முன்னெடுப்புகள் என்ற தலைப்பில் பேசிய திரு. சுபாஷ் – சிலாங்கூர் இளைஞர் தகவல் பிரிவு தலைவர் பல முக்கிய தகவல் பகிர்ந்து கொண்டது கண்டிப்பாக பயிற்ச்சியில் பங்கெடுத்தவர்களுக்கு அரசியல் களத்தில் பெரும் உதவியாக இருக்கும். திரு. சேகரமூர்த்தி – தலைமை நிறுவன மேலாளர் மற்றும் முன்னாள் தலைவர் CAMA மற்றும் முன்னாள் தலைவர் நிறுவனங்களின் சங்கம் மற்றும் ஆலோசகர் சத்ய சாய் பாபா பூச்சோங் மையம் அவர்கள் தலைமைத்துவப் பண்புகள் மற்றும் பேச்சுத்திறன் பற்றி உரையாற்றியது அனவருக்கும் பயனுள்ளதாக இருந்தது.  சிலாங்கூர் மாநில துணை தலைவர் திரு. வின்சன் பயிற்சியை நிறைவு செய்து வைத்தார்.

19029585_1589157404460098_9160836140916712366_n19106013_1589140421128463_602545239742664330_n19059115_1589139977795174_5719725917683848854_n18951435_1589143737794798_7477006026166828364_n   19059695_1589144061128099_1316717596561338971_n19030395_1589193441123161_5816199862090723310_n19029383_1589141897794982_7076326085673447135_n19113919_1589141814461657_6259975225349396697_n19029264_1589172407791931_7734358657739432863_n19106038_1589175404458298_2735683988495146215_n19059331_1589169777792194_935031122334553202_n19059331_1589191677790004_6566667162271559469_n19059564_1589189111123594_5888431899400468344_n19030282_1589172197791952_4774389460489058729_n18952583_1589192257789946_7361198916349781678_n 18953016_1589185007790671_3559340920057675512_n  18952540_1589172094458629_6521539941482587774_n 18951498_1589139751128530_3174815864128273333_n             19029455_1589181071124398_3147454654814150610_n  19029519_1589197404456098_5663817297661680226_n19030518_1589217924454046_3606910686176414587_n19030218_1589181321124373_6968153435915503910_n19030358_1589159224459916_3851425599974052569_n19059445_1589208107788361_6303112168764271638_n  19029449_1589151394460699_4690940076056101585_n19059829_1589207824455056_5825673074158784973_n19059592_1589177267791445_7512307985100843706_n 19059848_1589148847794287_3159679612262851344_n 19059908_1589142111128294_2070372436274350778_n  19060091_1589189884456850_6557776092182243225_n 19060178_1589200884455750_4740217278639419091_n 19105520_1589226667786505_2934119200460368679_n 19105882_1589728291069676_5136749389604739465_n 19105889_1589180844457754_6243345995634011999_n 19105947_1589149941127511_44420345413410775_n-1 19105947_1589149941127511_44420345413410775_n