மலாயா பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை பிரிவு இரு மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளது

மலாயா பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை பிரிவு இரு மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளது

1e4d

டிசம்பர் 11, மலாயா பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதித்துவ சபையின் முன்னாள் தலைவர், ஃபாஹ்மி சைனொலுக்கு அப்பல்கலைக்கழகம் இரு தவணை இடை நீக்கம் செய்யப்பட்டதுடன் RM 600 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமக்கு மட்டுமின்றி தம் சக நண்பரான சஃப்வான் சம்சுடினுக்கும் மலாயா பல்கலைக்கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை பிரிவு, ஒரு தவணை இடை நீக்கம் செய்திருப்பதாக தமது முகநூல் அகப்பக்கத்தில் ஃபாஹ்மி தெரிவித்தார்.
12 மணி நேர விசாரணைக்கு பிறகே இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி, மலாயாப் பல்கலைக்கழகத்தின் அனுமதி இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்துக்கொள்ளும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த குற்றத்திற்காக அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஃபாஹ்மி சைனொல் மற்றும் சஃப்வான் சம்சுடின் உட்பட இன்னும் 8 பேரை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்ததோடு அபராதமும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.