ராகாவின் ஸ்டார் குரல் தேடல் தொடங்கியது!

ராகாவின் ஸ்டார் குரல் தேடல் தொடங்கியது!

07august_thrraga

பாடுவதில் ஆர்வமா? நன்றாக பாடும் திறமை உண்டா? உங்கள் பாடும் திறமையை நிரூபிக்க இதோ காத்திருக்கிறது ராகாவின் ஸ்டார்.

திறமையான பாடகர்களைக் கண்டறியும் முயற்சியில் டி.எச்.ஆர் ராகா வானொலி நிலையம் ராகாவின் ஸ்டார் எனும் போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான குரல் தேடல் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை சமூக வளத்தளத்தில் இடம்பெறவுள்ளது.

ஆர்வமுள்ளவர்கள் ஒரு பாடலைப் பாடி அதனைக் காணொளியாகப் பதிவுச் செய்து Instagramகணக்கில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அக்காணொளியைப் பதிவேற்றம் செய்யும் பொழுது #RaagaStarஎனும் சொல்லை ஹேஸ்டேக் செய்ய மறவாதீர்கள்.

பிறகு, நியமிக்கப்பட்ட நடுவர் குழு அவற்றுள் சிறந்த 10பாடகர்களின் காணொளிகளைத் தேர்ந்தெடுப்பார்கள். நம் நாட்டின் முக்கிய இசையமைப்பாளர்கள் நடுவர்களாக இப்போட்டியில் பணியாற்றவுள்ளார்கள்.

தேர்தெடுக்கப்பட்ட 10காணொளிகளும் டி.எச்.ஆர் ராகாவின் அகப்பக்கத்தில் பொதுமக்கள் வாக்களிக்க பதிவேற்றம் செய்யப்படும். இந்த வாக்களிப்பு ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை raaga.fm அகப்பக்கத்தில் இடம்பெறும்.

அதிக வாக்குகள் பெறும் டாப் 5போட்டியாளர்கள் தேர்தெடுக்கப்பட்ட 5மலேசிய உள்ளூர் இசையமைப்பாளர்களுடன் இணைந்து ஒவ்வொரு போட்டியாளரும் கொடுக்கப்பட்ட 5நாட்களுக்குள் ஒரு பாடலை உருவாக்க வேண்டும்.

பாடலை உருவாக்கிய பிறகு டாப் 5போட்டியாளர்களும் எதிர்வரும் 26ஆம் தேதி சனிக்கிழமை டி.எச்.ஆர் ராகா முகநூலில் இடம்பெறவுள்ள நேரடி ஒளிபரப்பு கலைநிகழ்ச்சியில் அப்பாடலைப் பாட வேண்டும். சவால்மிகுந்த இந்தச் சுற்றுதான் ராகாவின் ஸ்டார் போட்டியின் வெற்றியாளரை நிர்ணக்கும்.

நடுவர்கள் தேர்ந்தெடுக்கும் முதல் நிலை வெற்றியாளர் ரிம 3,000ரொக்கம் தட்டிச் செல்லும் அரிய வாய்ப்புக் காத்து கொண்டிருக்கின்றது. இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை வெற்றியாளர்களுக்கு ரிம 2,000மற்றும் ரிம 1,000முறையே வழங்கப்படும்.

அதுமட்டுமின்றி, இறுதிச் சுற்றுக்குத் தகுதிப் பெறும் முதல் 5போட்டியாளர்கள் எதிர்வரும் செப்டம்பர் 24ஆம் தேதி ஜிஎம் கிள்ளான் வளாகத்தில் நடைபெறவுள்ள ஆஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டத்தில் டி.எச்.ஆர் ராகா கலைநிகழ்ச்சியின் போது பாடும் வாய்ப்பும் வழங்கப்படவுள்ளது.

மேல் விவரங்களுக்கு raaga.fmஅகப்பக்கத்தை நாடுங்கள்.