மஇகா இளைஞர் பிரிவின் உச்சமன்ற மாநாடு மற்றும் தலைமைத்துவ பயிற்சி முகாம்

மஇகா இளைஞர் பிரிவின் உச்சமன்ற மாநாடு மற்றும் தலைமைத்துவ பயிற்சி முகாம்

MICCouncil2 MICCouncil3

மஇகா இளைஞர் பிரிவின் உச்சமன்ற மாநாடு 8/8/2014 மாலை மணி 6.30 போட்டிக்சனின் உள்ள ஈகல் ராஞ்ச் ரிசார்ட்டில் (Eagle Ranch Resort) நடைபெற்றது. இளைஞர் பிரிவு தலைவர்கள், உச்சமன்ற உறுப்பினர்கள், (bureau) பணியக தலைவர்கள், மற்றும் தேசிய இளைஞர் பிரிவின் நடவடிக்கை குழு உறுப்பினர்கள் என 80 பேர் கலந்து கொண்டனர்.

இம்முறை உச்சமன்ற மாநாட்டோடு தலைமைத்துவ பயிற்சி முகாமும் நடைபெற்றது. இதில் அனைத்து தொகுதி இளைஞர் பிரிவு தலைவர்களும் அவர்தம் 2 பேராளர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிகழ்வு 8-10 ஆகஸ்ட் 2014 நடைபெறுகிறது.

மாநாட்டில் தலைவர் சிவராஜ் அவர்கள் இளைஞர் பிரிவின் நடவடிக்கைகளை விளக்கினார். அனைத்து மாநிலங்களிலும் நடந்து முடிந்த பேராளர் மாநாடுகள் மிக சிறப்பாக இருந்தாக  பாராட்டினார்.

மாநில தலைவர்கள் RM 1000 மானியதிற்க்கு நன்றி தெரிவித்தனர்.

திரு. சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் மதம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என கேள்வி எழுப்பினார்.  திரு. S.P. பிரபா அவர்கள் மதமாற்றம் சம்பந்தமான பிரச்சனைகளை குறைப்பதற்கான வழிமுறைகளை முன்வைத்தார். திரு. கோபி மணியம் அவர்கள் சபாபர்ணம் இளைஞர் பிரிவு தலைவர் மற்றும் துணை தலைவர் நியமிக்கப் படாமல் இருப்பதற்கு விளக்கம் கேட்டார். திரு. சோமசுந்தரம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கான காரணங்கள் மற்றும் அதன் நிலை குறித்தும் சிலர் வினவினர்.

MICCouncil1 MICCouncil4