கடற்கரை பகுதியில் கமாண்டோ படையை களம் இறக்க முடிவு

கடற்கரை பகுதியில் கமாண்டோ படையை களம் இறக்க முடிவு

T330_73373_123

ஜனவரி 5, பாகிஸ்தானில் இருந்து மர்ம படகு ஒன்றில் தீவிரவாதிகள் குஜராத்தை நோக்கி ஊடுருவ முயன்ற சம்பவத்தை அடுத்து நன்கு பயிற்சி பெற்ற 173 கமண்டோக்கள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். குஜராத் கடற்கடை பாதுகாப்புக்கு 20 காவல் நிலையங்களை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த மாநில துணை காவல் கண்காணிப்பாளர் பி.ஜே.நயினம்மா இந்த தகவலை கூறினார். கடலுக்கு சென்று திரும்பும் ஒவ்வொரு படகு குறித்தும் கண்காணிக்கும் பணியில் இந்தகமாண்டோக்கள் ஈடுபடுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கு கடலோர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில் அனைத்து வாகன வசதிகளும் செய்துத் தரப்படும் என்று நைனமா கூறினார். கடல் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான படகுகளை கண்டால் கமாண்டோக்கள் கடலோர காவல்படை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் அனுமதி மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் யாரும் நுழைய முடியாது என்று நைனமா தெரிவித்தார்.

இதனிடையே சர்வதேச கடல் எல்லை அருகே மீன்பிடித்த இந்தியாவை சேர்ந்த 12 மீனவர்களை சிறைபிடித்தும், அவர்களின் இரண்டு மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்தும் பாகிஸ்தான் கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கந்தகார் விமான கடத்தல் பாணியில் விமானத்தை கடத்த தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளதால் நாடு முழுவதும் விமான நிலைய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.