மோடியுடன் சந்திப்பு: ஜெயலலிதா நாளை டெல்லி பயணம்

j1

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் புதிய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா நாளை காலை டெல்லி செல்கிறார்.

காலை 11.30 மணிக்கு தனி விமானத்தில் செல்லும் அவர் டெல்லியில் இறங்கியதும் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

புதிதாக வெற்றி பெற்ற 37 அ.தி.மு.க. எம்.பி.க்கள், 10 மேல்–சபை எம்.பி.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், நிர்வாகிகள் விமான நிலையத்தில் திரண்டு முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வரவேற்பு கொடுக்கின்றனர்.

பின்னர் கார் மூலம் தமிழ்நாடு இல்லத்திற்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா செல்கிறார்.

அங்கு தமிழக மூத்த அமைச்சர்கள், டெல்லி சிறப்பு பிரதிநிதி எஸ்.கே.டி. ஜக்கையன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக வரவேற்பு கொடுக்கிறார்கள்.

பின்னர் மதியம் 1 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சந்தித்து பேசுகிறார். அப்போது தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கி தரும்படி விரிவான மனு கொடுக்கிறார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை குறித்தும் மற்றும் பல்வேறு முக்கிய பிரச்சினை குறித்தும் அவர் பிரதமருடன் பேசுகிறார்.

பின்னர் நாளை மாலையே முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.