slide
Prev
Next
ம.இ.கா புத்ராவின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி விளையாட்டு போட்டிகள்.*     ம.இ.கா இளைஞர் பிரிவும் மணிபால் சர்வதேச பலகலைக்கழகமும் இணைந்து உதவித்தொகை திட்டம்.*    தமிழகத்தின் புதிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.*     நடிகர் ஜோ இன்று காலை மருத்துவமனையில் காலமானார்.*

சற்றுமுன்

ம.இ.கா தேசிய இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பேராளர்கள் மாநாடு கோலாலம்பூரில் உள்ள ஹோட்டல் இஸ்தானாவில் இன்று 17/09/2017  நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு ம.இ.கா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலையேற்றார். மாநாட்டில் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன், ம.இ.கா தேசிய மகளிர் பிரிவு தலைவி டத்தோ மோகனா முனியாண்டி, ம.இ.கா தேசிய புத்ரா பிரிவு தலைவர் யுவராஜ மணியம், ம.இ.கா தேசிய புத்ரி பிரிவு தலைவி குணசுந்தரி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களுடன் ம.இ.கா தலைவர்களும் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரா பிரிவு பேராளர்களும் கலந்துகொண்டனர்.

சுக்கிம் 4 2017 மலேசிய இந்தியர்களின் விளையாட்டு திருவிழா கடந்த ஜூலை 04 2017 அன்று துவஙகி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 06 தேதி துணை பிரதம மந்திரி ஒரு வண்ணமிகு நிகழ்ச்சியில் சுக்கிம் 4 ஐ பல மலேசிய இந்திய தலைவர்கள் முன்னிலையில் அதிகாரப் பூர்வமாக துவஙகி வைத்தார். கடந்த 5 நாட்களாக UPSI விளையாட்டு வளாகத்தில் பல வகையான விளையாட்டு போட்டிகளில் இளைஞர்களும் இளைஞிகளும் ஆர்வமுடன் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றனர். இந்த சுக்கிம் 4 போட்டியில் பழைய சாதனைகளை முறியடித்து பலர் புது சாதனைகளை நிகழ்த்தினர். இந்த வருடம் சுக்கிம் 4 டேக்குவா போட்டிகள் அறிமுகப் படுத்தப்பட்டன. […]

தேசிய வகை குவாங் தமிழ்ப்பள்ளியில் விளையாட்டு போட்டி. குவாங் தேசிய வகை தமிழ்ப்பள்ளியில் 26-6-2014 அன்று விளையாட்டு போட்டி நடைபெற்றது. 1 முதல் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குழுப் போட்டிகளும், தடகளப் போட்டிகளும் மற்றும் 50, 80, 100, 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களும் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. செலாயாங் தொகுதி மஇகாவின் இளைஞர் பிரிவு தலைவர் திரு எஸ்பி பிரபா , இப்போட்டியை தொடக்கி வைத்தார். மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இந்த போட்டிக்கு செலாயாங் தொகுதி மஇகாவின் இளைஞர் பிரிவு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திரு சிவகுரு அவர்களிடம் நன்கொடை வழங்கியது. செலாயாங் தொகுதி மஇகாவின் இளைஞர் பிரிவு […]

Categories: Uncategorized

கடந்த வியாழனன்று ஆஸ்ரேலிய அதிகாரிகள் வெளியிட்ட புதிய அறிக்கையில் எம்எச் 370இன் பயணிகளும் பணியாளர்களும் மூச்சுத் திணறலால் மரணமுற்றிருக்கலாம் என்பதுடன் தன்னியக்க முறையில் சென்ற விமானப் பயணிகள் உயிரற்ற நிலையில் கடலினுள் மூழ்கிருக்கலாம் என கூறுகிறது. அந்த 55 பக்க அறிக்கை குறித்து ஆஸ்ரேலிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் கருத்து வெளியிட்டது. முந்திய பேரிடர்களுடன் சம்பந்தப்பட்ட விமானத்தை ஒப்பிட்ட பிறகு புலனாய்வாளார்கள் அந்த முடிவுக்கு வந்துள்ளனர் என அவ்வாரியம் குறிப்பிட்டுள்ளது. எனினும் சம்பந்தப்பட்ட விமானத்தின் உள்ளிருந்து புதிய ஆதாரம் எதையும் இந்த அறிக்கை உள்ளடக்கவில்லை.

Categories: Uncategorized

புதுடில்லி: மோடி பிரதமராக பதவியேற்று ஒரு மாதம் ஆன நிலையில் அவரின் செயல்பாடுகள் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மோடி பிரதமராகபதவியேற்றவுடன் அரசு அதிகாரிகள் அனைவரையும் சந்தித்து அவர்களுக்கு தேவையான ஆலோசனைகள்வழங்கினார். அதுமட்டுமல்லாது நான்கு கட்டங்களுக்கு மேல் அரசு கோப்புகள் மேஜையில் தங்கியிருக்க கூடாது எனவும், அதிகாரிகள் அனைவரும் தங்களின் துறை பற்றிய விவரங்கள் மற்றும் திட்டங்கள் தயாரித்து வைத்திருக்கின்றனரா என்பதை தெரிவிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். மேலும் கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் போது சுணக்கத்தில் காணப்பட்ட பங்குசந்தை மற்றும் இந்திய பொருளாதாரம் மோடி பதவியேற்றவுடன் புதிய உத்வேகத்துடன் இயங்க துவங்கியது. தங்கம் விலை குறைய துவங்கியதுடன் விலைவாசிகளும் கட்டுக்குள் கொண்டு […]

Categories: Uncategorized

சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி நேரில் ஆஜராகுமாறு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் ஊடக நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலம் தவறான பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் சோனியா மற்றும் ராகுல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த பாட்டியாலா நீதிமன்ற நீதிபதி, சோனியா மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் ஆகஸ்ட் மாதம் 7-ந்தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்புமாறு உத்தரவிட்டார்.

Categories: Uncategorized

ஷா ஆலம், ஜூன் 18 -சிலாங்கூர் இஸ்லாமிய சமயத்துறையால் (ஜாயிஸ்) கைப்பற்றப்பட்ட பைபிள்களை மலேசிய பைபிள் சங்கத்திடம் திரும்ப ஒப்படைப்பதா? இல்லையா? என்ற முடிவை சிலாங்கூர் சுல்தான் மட்டுமே எடுப்பார் என்று அம்மாநில மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து ஆட்சிக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் தாம் சுல்தானை சென்று சந்திக்கப் போவதாகவும் காலிட் கூறியுள்ளார். கடந்த ஜனவரி 2 -ம் தேதி ஷா ஆலமில் உள்ள பிஎஸ்எம் அலுவலகத்தில் புகுந்த ஜாயிஸ் அதிகாரிகள், 321 மலாய் மொழி பைபிள்களையும் (அல்கிதாப்) இபான் பைபிள்களையும் (புப் கூடுஸ்) பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.    

Categories: Uncategorized

மலாக்கா, 16 ஜூன்- டெங்கியை ஒழிக்க இதுவரை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாததால், அவையனைத்தும் பலனளிக்கவில்லை.அவ்வகையில் கடந்த ஜனவரி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை டெங்கி காய்ச்சல் மற்றும் டெங்கி காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 10,910 பேர் டெங்கி காய்ச்சல் சம்பவங்களும் 22 உயிரிழப்புகளும் பதிவு செய்யப்பட்ட வேளையில், இவ்வாண்டு அவ்வெண்ணிக்கை 38,411-ஆக அதிகரித்துள்ளதுடன் 75 பேர் டெங்கி காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.மேலும் கூறுகையில், மக்களிடம் டெங்கி காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு இல்லையென்றால் அரசாங்கம் எடுக்கும் எந்த நடவடிக்கைகளும் பலனளிக்காது. எனவே, […]

Categories: Uncategorized