பிரியா கதாநாயகியாக அறிமுகமாகும் சோன் பப்டி

பிரியா கதாநாயகியாக அறிமுகமாகும் சோன் பப்டி

image

டிசம்பர் 24, சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான ‘சிங்கம்’ படத்தில் அனுஷ்காவிற்கு தங்கையாக நடித்திருப்பவர் பிரியா. இவர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘நான் மகான் அல்ல’ படத்திலும் கார்த்திக்கு தங்கையாக நடித்திருக்கிறார்.

இவர் ராஜா ராணி படத்தை இயக்கிய அட்லியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

தங்கை கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரியா ‘சோன் பப்டி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை திருமணத்திற்கு முன்பே பிரியா நடித்து முடித்து விட்டார். தற்போது இப்படக்குழுவினர் பின்னணி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்படத்தில் நாயகனாக ‘வழக்கு எண் 18/9’, ஓநாயும் ஆட்டுகுட்டியும்’ படத்தில் நடித்த ஸ்ரீ நடித்திருக்கிறார். மேலும் நிரஞ்சனாவும் இப்படத்தில் மற்றொரு நாயகியாகவும் நடித்துள்ளார்.

இப்படத்தை ஷிவானி இயக்கியிருக்கிறார். ஜனவரி மாதம் இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

த்து வந்த பிரியா ‘சோன் பப்டி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை திருமணத்திற்கு முன்பே பிரியா நடித்து முடித்து விட்டார். தற்போது இப்படக்குழுவினர் பின்னணி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படத்தில் நாயகனாக ‘வழக்கு எண் 18/9’, ஓநாயும் ஆட்டுகுட்டியும்’ படத்தில் நடித்த ஸ்ரீ நடித்திருக்கிறார். மேலும் நிரஞ்சனாவும் இப்படத்தில் மற்றொரு நாயகியாகவும் நடித்துள்ளார். இப்படத்தை ஷிவானி இயக்கியிருக்கிறார். ஜனவரி மாதம் இறுதியில் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.