தேசிய வகை குவாங் தமிழ்ப்பள்ளியில் விளையாட்டு போட்டி

தேசிய வகை குவாங் தமிழ்ப்பள்ளியில் விளையாட்டு போட்டி

IMG-20140627-WA0054

தேசிய வகை குவாங் தமிழ்ப்பள்ளியில் விளையாட்டு போட்டி.

குவாங் தேசிய வகை தமிழ்ப்பள்ளியில் 26-6-2014 அன்று விளையாட்டு போட்டி நடைபெற்றது. 1 முதல் 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு குழுப் போட்டிகளும், தடகளப் போட்டிகளும் மற்றும் 50, 80, 100, 400 மீட்டர் ஓட்டப்பந்தயங்களும் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

செலாயாங் தொகுதி மஇகாவின் இளைஞர் பிரிவு தலைவர் திரு எஸ்பி பிரபா , இப்போட்டியை தொடக்கி வைத்தார். மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

DSC_1814

இந்த போட்டிக்கு செலாயாங் தொகுதி மஇகாவின் இளைஞர் பிரிவு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் திரு சிவகுரு அவர்களிடம் நன்கொடை வழங்கியது.

செலாயாங் தொகுதி மஇகாவின் இளைஞர் பிரிவு செயலாளர் திரு விக்னேஸ்வரன் , செலாயாங் தொகுதி மஇகாவின் இளைஞர் பிரிவு தகவல் பிரிவு அதிகாரி திரு. சிவசங்கர், கம்போங் பூங்கா ராயா மஇகா கிளையின் தலைவி திருமதி ராணி ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

பள்ளிக்கூடத்தை சுற்றி பார்த்த திரு எஸ்பி பிரபா , இப்பள்ளியின் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், மறுசீரமைப்புக்கும் தங்களால் ஆன உதவிகளை செய்து தருவதாக உறுதியளித்தார். அது தொடர்பான கடிதங்களை எழுதுமாறு தலைமையாசிரியர் திரு அன்பழகனிடம் கேட்டுக் கொண்டார்.

IMG-20140627-WA0014 IMG-20140627-WA0015 IMG-20140627-WA0017 IMG-20140627-WA0019 IMG-20140627-WA0073 IMG-20140627-WA0082 IMG-20140627-WA0091 IMG-20140627-WA0092 IMG-20140627-WA0093 IMG-20140627-WA0096