இந்தோனேஷியாவில் இருந்து புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் மாயம்

AirAsia

இந்தோனேஷியா சுரபயாவில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா இந்தோனேஷியா விமானம் நடுவானில் பயணம் செய்யும் போது தொடர்பை இழந்துவிட்டதாக ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

சுரபயா நேரப்படி காலை 7.24 மணிக்கு QZ8501 எண் கொண்ட A320-200 ஏர்பஸ் விமானம் கட்டுப்பாட்டு அறையுடன் தனது தொடர்பை இழந்தது. 

16 சிறுவர்கள் 1 குழந்தை 138 பெரியவர்கள் என 155 பயணிகளும், 2 விமானி மற்றும் 5 விமான பணியாளர்கள் விமானத்தில் இருந்ததாக ஏர் ஏஷியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களில் 1 சிங்கப்பூர், 1 மலேசியா, 1 ப்ரான்ஸ், 3 தென் கொரியா மற்றும் 156 இந்தோனேஷியர்கள் எனவும் ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.

விபத்து பற்றிய விவரம் வேண்டுவோர் வசதிக்காக +622129850801 என்ற தொலைபேசி எண்ணை ஏர் ஏசியா விமான நிறுவனம் தொடர்புக்காக கொடுத்துள்ளது.

இந்தோனேசியா சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் வழிகாட்டுதலுடன் தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் ஏர் ஏசியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.