தமிழகத்தில் நாளை மழை பெய்ய வாய்ப்பு.

தமிழகத்தில் நாளை மழை பெய்ய வாய்ப்பு.

rain

கடந்த சில நாள்களுக்கு முன்பு வங்கக் கடலில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டிருந்தது. இந்த சுழற்சி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அது தற்போது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது.இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது: தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கைக்கு அருகில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக வியாழக்கிழமை (நவ.27) முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் கனமழை பெய்யும். இந்த மழை மேலும் சில நாள்களுக்கு நீடிக்கும்.அதேவேளையில் புதன்கிழமையன்று ஒரு சில இடங்களில் மட்டும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனிடையே, செவ்வாய்க்கிழமை காலை வரையிலான நிலவரப்படி ராமநாதபுரம், பாம்பன் ஆகிய இடங்களில் மட்டும் மழை பெய்துள்ளது.