கிராமத்தினரின் மறியலால் தடுப்பணையை கிராம மக்களே அகற்றினர்.

கிராமத்தினரின் மறியலால் தடுப்பணையை கிராம மக்களே அகற்றினர்.

post

நெல்லை மாவட்டம் மானூர் அருகே மேலப்பிள்ளையார்குளம் கிராமம் உள் ளது. இங்குள்ள குளத்திலிருந்து கீழப்பிள்ளையார்குளம் செல்லும் கால்வாயில் பொதுப்ப ணித்துறை அனுமதியின்றி சுமார் 35 அடி நீளத்தில் தடுப்பணை கட்டப்பட்டது. கீழப்பிள் ளையார் குளத்திற்கு கசிவு தண்ணீர்கூட செல்ல முடியாமல் தடுக்கப்பட்டது. தடுப்பணையை அகற்றக் கோரி நடுப்பிள்ளையார்குளம், கீழப்பிள்ளையார்குளம் கிராம  மக்கள் சுமார் ஆயிரம் பேர் நேற்று காலை ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க போவதாக  கூறி மானூர் யூனியன் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். தடுப்பணை சுவரை அகற்றப்போவதாக அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து போராட்டம்  கைவிடப்பட்டது. இதை தொடர்ந்து 25 அடி நீள தடுப்பணை சுவரை மேலப்பிள்ளையார் குளம் கிராம மக்களே அகற்றினர்.