இந்தியர்களின் திறமை இந்தியாவை தாண்டி வெளியே செல்ல வேண்டும்: ஒபாமா

இந்தியர்களின் திறமை இந்தியாவை தாண்டி வெளியே செல்ல வேண்டும்: ஒபாமா

BarackObama

ஜனவரி 27, 66வது குடியரசு தின விழாவில் பங்கேற்ற பின், டெல்லியில் உள்ள தாஜ் ஹோட்டலில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பங்கேற்றுள்ள சிஇஓக்களுக்கான கூட்டத்தில் பங்கேற்று முக்கிய ஒப்பந்தங்கள் மற்றும் முதலீடுகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்கா நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதைப் போல இந்திய நிறுவனங்களும் அமெரிக்காவில் முதலீடு செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இந்தியாவுடன் கடந்த சில ஆண்டுகளில் 60% வரை வர்த்தக உறவு மேம்பட்டுள்ளது என்று ஒபாமா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இருதரப்பு முதலீடுகளால் இருநாடுகளும் மேம்படும் என்றும் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார். இந்தியர்கள் உலகம் முழுவதும் தொழில் நிறுவனங்களை அமைக்க வேண்டும் என்று ஒபாமா கேட்டுக் கொண்டுள்ளார். இந்தியர்களின் திறமை இந்தியாவை தாண்டி வெளியே செல்ல வேண்டும் என்றும் ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.