அமெரிக்காவை மிரட்டும் பனி புயல்: 7000 விமானங்கள் ரத்து

அமெரிக்காவை மிரட்டும் பனி புயல்: 7000 விமானங்கள் ரத்து

airp

ஜனவரி 27, அமெரிக்காவை மிரட்டும் பனி புயல் காரணமாக நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் இருந்து இயக்கப்படும் 7000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த சில நாட்களாக நீட்டித்த பனி பொழிவு, புயலாக மாறியுள்ளதால், மழை போல் பனி கொட்டுகிறது. இதனால் சாலையில் 3அடி உயரத்திற்கு பனிக்கட்டிகள் தேங்கியுள்ளன. நியூயார்க், நியூ ஜெர்சி போன்ற பகுதிகளில் பனி புயல் காரணமாக 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர்.

முக்கிய சாலைகளில் பனி கட்டிகள் தேங்கி கிடப்பதால், அவை மூடப்பட்டு போக்குவரத்திற்கு தடை விதிகப்படுள்ளது. மூடப்பட்டுள்ள சாலைகளில் பயணிப்பது குற்றம் என்றும், தடையை மீறுவோருக்கு 78,000ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனி புயல் காரணமாக சுமார் 7000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், விமான போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் பயணிகள் பல மணி நேரம் விமான நிலையங்களில் காத்துக்கிடக்கின்றனர்.

பனி புயல் காரணமாக ஐநா தலைமை அலுவலகம், பள்ளிகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பனி புயல் மேலும் தீவிரமடையும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், சுமார் 3 கோடி பேர் கடுமையாக பதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. 2012ம் ஆண்டில் 200 பேரை பலி கொண்ட சாண்டி புயலை போன்ற பாதிப்பு, தற்போது பனி பொழிவு ஏற்படுத்தலாம் என கருதி அவசர கால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.