அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி பிலிப்பைன்சில் கைது

அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த தீவிரவாதி பிலிப்பைன்சில் கைது

wl5

சர்வதேச பயங்கரவாதியான பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ள அபு சய்யாப் தீவிரவாத இயக்கத்தின் தலைமை தளகர்த்தர் காயிர் முண்டோஸ். இந்த இயக்கம் மேற்கத்திய சுற்றுலாப்பயணிகளை கடத்தி பிரபலமானது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் பல்வேறு தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்கு பின்லேடனின் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்திடமிருந்து இந்த அபு சய்யாப் தீவிரவாத இயக்கம் நிதி உதவி பெற்று வந்துள்ளது. அதில் காயிர் முண்டோசுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த காயிர் முண்டோஸ் வெடிகுண்டு தயாரிப்பதில் மன்னனாகத் திகழ்ந்தவர்.
இவரை உயிருடனோ, பிணமாகவோ பிடித்துக்கொடுத்தால் 5 லட்சம் டாலர் (சுமார் ரூ. 3 கோடி) தரப்படும் என்று அமெரிக்கா அறிவித்திருந்தது.
இவரது அபு சய்யாப் தீவிரவாத இயக்கத்தை அமெரிக்கா தீவிரவாத இயக்கமாக அறிவித்ததுடன், பிலிப்பைன்சில் அமெரிக்க படை வீரர்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும், அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கும் இவர்தான் காரணம் எனவும் அறிவித்திருந்தது.