பிபிசிக்கு மத்திய அரசு நோட்டீஸ்

பிபிசிக்கு மத்திய அரசு நோட்டீஸ்

bbcnewsbbc

மார்ச் 7, வர்த்தக ரீதியில் பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழியை மீறி, இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை இங்கிலாந்தில் ஒளிபரப்பிய பிபிசி தொலைக்காட்சிக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸை மத்திய அரசு அனுப்பியது. இந்த ஆவணப் படத்தை வர்த்தக ரீதியில் பயன்படுத்த மாட்டோம் என்ற உறுதிமொழி மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் பலாத்கார வழக்கில் சிறையில் உள்ளவரை பேட்டி எடுக்க அனுமதி அளிக்கப்பட்டது. அந்த ஒப்பந்ததை மீயதாக பிபிசிக்கு நேற்று முன்தினம் மாலையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதாவது இந்த ஆவணப் படத்தை பிபிசி லண்டனில் ஒளிபரப்பு செய்வதற்கு முன்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. திகார் சிறை டைரக்டர் ஜெனரல் அலோக் குமார் சர்மா, மத்திய அரசின் வழக்கறிஞர் மூலம் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார். இந்த ஆவணப் படம் வெளியிடப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.