4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் விஷால் அணி

4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யும் விஷால் அணி

vishalteam

அக்டோபர் 7,தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1-ந் தேதி தொடங்கி முடிவடைந்தது. நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் தலைமயில் ஒரு அணியும்,  விஷால் தலைமயில் ஒரு அணியும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இரு அணியும் ஓட்டு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தலில் ஓட்டுபோட தகுதி உள்ளவர்களாக 3,139 பேர் உள்ளனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாடக நடிகர்-நடிகைகள். இவர்களின் ஆதரவை திரட்ட விஷால் அணி சென்னையில் இருந்து தனி பஸ்சில் 40 பேர் செல்கின்றனர். நடிகர்-நடிகைகள் திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, கோவை, சேலம், கரூர் நாமக்கல் பகுதிகளில் அதிக அளவில் உள்ளனார்.