ஹாங்காங்கில் அமலா பால்

ஹாங்காங்கில் அமலா பால்

20-1403239461-amala-paul-honeymoon-01

அக்டோபர் 27, இயக்குனர் விஜய்யும், அமலா பாலும் காதல் திருமணம் செய்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ள அமலா, மலையாளத்தில் இரு படங்களில் நடிக்கிறார். தற்போது விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் படத்தை விஜய் இயக்குகிறார். அப்படத்துக்கு பெயரிடவில்லை. நேற்று அமலாவுக்கு பிறந்த நாள். அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்த விஜய், தன்னுடன் புறப்பட்டு வரும்படி அவரை அழைத்துச் சென்றார். சர்வதேச விமான நிலையம் சென்ற பிறகுதான், வெளிநாடு செல்லப்போகிறோம் என்று அமலாவுக்கு தெரிய வந்தது.இதுகுறித்து அமலா கூறுகையில், ‘பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஜய், திடீரென்று என்னை புறப்படச் சொன்னார். எங்கே என்று கேட்டபோது, சஸ்பென்ஸ் என்றார். விமான நிலையம் சென்ற பிறகு தான், ஹாங்காங்கில் உள்ள சுற்றுலாத் தலமான மக்வ் அழைத்துச் செல்வதாக சொன்னார். அந்த இடத்தைப் பார்க்க ஆசையாக இருந்தேன். விஜய் என்மீது காட்டும் பாசத்தைப் பற்றி நான் என்ன சொல்வதென்று தெரியவில்லை. நான் ரொம்ப கொடுத்து வைத்தவள்’ என்றார்.