சம்பளம் வேண்டாம் லட்சுமி மேனன் தாராளம்

சம்பளம் வேண்டாம் லட்சுமி மேனன் தாராளம்

Lakshmi-Menon

டிசம்பர் 9, கோடிக்கணக்கில் எடுத்து வைத்தால்தான் கால்ஷீட் என டாப் ஹீரோயின்கள் கறாராக பேசும் நிலையில் ‘உங்க படத்துல சான்ஸ் கொடுத்ததே போதும் சம்பளம் வேண்டாம்’ என்று லட்சுமிமேனன் சொன்னால் எப்படி இருக்கும். பிரசாந்த் நடிக்கும் ‘சாகசம்’ படத்துக்கு அவர் அப்படித்தான் சொல்லி இருக்கிறார். தியாகராஜன் தயாரித்து இயக்கும் இப்படத்திற்கு பிரபல பாடகர்கள் சங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல், மோஹித் சவ்ஹான், அர்ஜித் சிங், ஆண்டிரியா ஆகியோர் பாடல் பாடி உள்ளனர். வித்தியாசமான ஒரு குரலுக்கு வாய்ஸ் தேடியபோது ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் பாட்டு பாடிய நடிகை லட்சுமி மேனனின் குரல் பொருத்தமாக இருக்கும் என நினைத்து அவருக்கு போன் செய்தார் தியாகராஜன். ‘பிரசாந்த் படத்துக்கு ஒரு பாடல் பாட வேண்டும்‘ என்றதும் ‘நிச்சயமா பாடுகிறேன். ஆனால் சம்பளம் எதுவும் வேண்டாம். பாடுவதற்காக என்னை தேர்வு செய்ததே போதும்’ என்றவர் வெளியூரிலிருந்து சென்னை வந்து பாடல் பாடினார். லட்சுமி மறுத்தாலும் அவருக்கான சம்பள தொகையை கொடுத்தாராம் தியாகராஜன்.